டெப்லிம்பிக்சில் இந்தியாவுக்கு 20 பதக்கங்கள் .
காதுகேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நிறைவு விழா இன்று நடக்கிறது.
இந்தியா சார்பில் 45 வீரர்கள், 28 வீராங்கனைகள் 11 போட்டிகளில் பங்கேற்றனர். கோல்ப் போட்டியில் இந்தியாவின் திக்ஷா தாகர், தங்கப்பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.
தனுஷ் (2 தங்கம்), அனுயா, அபினவ் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர். 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என துப்பாக்கிசுடுதலில் 16 பதக்கங்களை இந்திய நட்சத்திரங்கள் குவித்தனர்.
இந்தியாவின் சுமித் தாஹியா ஆண்கள் மல்யுத்தத்தில் தங்கம் கைப்பற்றினார்.அமித் கிருஷ்ணன் வெள்ளி வென்றார்.
கராத்தேயில் லோமா ஸ்வெய்ன், வெண்கலம் வென்றார்.
இந்தியா 9 தங்கம்,7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்ற இந்தியா, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.
0
Leave a Reply