கிளாசிக் செஸ் தொடர் லண்டனில், மொத்தம் 119 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, இனியன் 23, உள்ளிட்டோர் விளையாடினர். இதன் 9வது சுற்றில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் இல்யா ஸ்மிரின் மோதி, 18வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு 9வது சுற்று போட்டி ,இந்தியாவின் இனியன் ,), பிரனவ் ஆனந்த் மோதி 48வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்திய வீரர்களான பிரனவ் ஆனந்த் (6.5 புள்ளி), இனியன் (6) முறையே 4, 9வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். செர்பியாவின் வெலிமிர் ஐவிக், இங்கிலாந்தின் அமீத்காசி, பிரக்ஞானந்தா தலா 7.0 புள்ளிகளுடன் ஒன்பது சுற்றுகளின் முடிவில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.
'சூப்பர் 100' மாஸ்டர்ஸ் பாட்மின்டன்தொடர் அசாமின் கவுகாத்தியில் ,பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா 16, இந்தோனேஷி யாவின் தலிலா புதேரி மோதினர். இதில் தான்வி சர்மா 6-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்ற போட்டிகளில் இந்தியாவின் அன்மோல் கார்ப், தஸ்னிம்மிர், அஷ்மிதா, அனுபமா, இஷா ராணி, தன்யா ஹேம்னாத் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இந்தியாவின் தருண், இந்தோனேஷியாவின்ரிச்சி டுடா ரிச்சார்டோ ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் தருண் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் சங்கர் முத்துசாமி காயத்தால் விலகியதால், சகவீரர்மிதுன் மஞ்சுநாத் மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் துஷார் சுவீர் 21-14, 21-19 என சகவீரர் ரகு மாரிசாமியை வென்றார்..
ஜூனியர் உல கக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில் ,மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.'பி' பிரிவில் இடம் பெற்ற இந்தியஅணி ,சிலி (7-0) ஓமன் (17-0) சுவிட்சர்லாந்தை (5-0) வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது. தவிர, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, நியூசிலாந்து, பெல்ஜியம் என மொத்தம் 8 அணிகள்காலிறுதிக்குள் நுழைந்தன. நாளை சென்னையில் நடக்கும் நான்காவது காலிறுதி போட்டியில் இந்திய அணி, ''டி' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. மற்ற காலிறுதி போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி-பிரான்ஸ், ஸ்பெயின்-நியூசிலாந்து, நெதர்லாந்து-அர்ஜென்டினா அணிகள் போட்டி போட உள்ளனர்.
தாய்லாந்தில், ஆசிய குதிரையேற்ற சாம்பியன் ஷிப் தாய்லாந்தில், 'ஈவென்டிங்' தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க்கனுமுரி பங்கேற்றனர். இதில் 29.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஆஷிஸ் லிமாயே, தங்கப்பதக்கத்தை வென்றார்.ஆசிய குதிரையேற்ற சாம்பியன் ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஆஷிஸ் லிமாயே. 'ஈவென்டிங்' அணிகள் பிரிவில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க் கனுமுரி அடங்கிய இந்திய அணி, 121.8 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றனர். தாய்லாந்து அணி (117.6) தங்கத்தை கைப்பற்றியது. ஒரு தங்கம், 4 வெள்ளி என, 5 பதக்கம், இம்முறை இந்தியாவுக்கு கிடைத்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்க,இந்தியாவந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, முதல் போட்டி வரும் டிச. 9ல் கட்டாக்கில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் நியூ சண்டிகர் (டிச. 11), தரம்சாலா (டிச. 14), லக்னோ (டிச.17), ஆமதாபாத்தில் (டிச. 19) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன்கில் 26, 'ஆல்-ரவுண் டர்' ஹர்திக் பாண்ட்யா 32, இடம் பெற்றுள்ளனர். சமீபத்திய கோல் கட்டாடெஸ்டில் கழுத்து பகுதியில் காயமடைந்த, சுப்மன் கில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள்தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் இவர், 'டி-20' அணிக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட போதும், காயத்தின் தன்மையைபொறுத்து 'லெவன்' அணியில் இடம் பெறுவார்.
ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் தாய்லாந்தில் (2026, ஏப். 1-18), பெண்களுக் கான (20 வயது) 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது இந்தியா.இந்தியஅணி, உஸ்பெகிஸ்தானுக்கு, எதிராகஇரண்டுநட்பு போட்டியில்பங்கேற்றது.முதல்போட்டியில் வென்றஇந்தியா ,இரண்டாவது போட்டி மகாபலிபுரத்தில், இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சுலஞ்ஜனா 2, பூமிகா, நேஹா தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா இரு அணிகள் மோதிய 4 போட்டியில், மூன்றாவது வெற்றி பெற்றது .ஒரு போட்டி 'டிரா' (1-1) ஆனது.
.14வது சீசன் ஜூனியர்உலகக் கோப்பை ஹாக்கி, சென்னை, மதுரையில் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப் பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்திய அணி பி' பிரிவில்இடம் பெற்றுள்ள ,முதல் இரு போட்டிகளில் சிலி (7-0), ஓமனை (17-0) வென்றது. தனது கடைசி லீக் போட்டியில் நேற்று மதுரையில் நடந்த சுவிட்சர்லாந்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.'டி' பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் அணி, நமீபியாவை எதிர்கொண்டது. ஸ்பெயின் அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மதுரையில் நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி, 10-0 என எகிப்தை வீழ்த்தியது. மலேசிய அணி 1-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.நெதர்லாந்து அணி 11-0 என ஆஸ்திரியாவை வென்றது.
18வது சீசன் ,சையது முஷ்தாக் அலி டிராபி, 'டி-20' தொடரின் 18வது சீசன்,. நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் பீஹார், மகாராஷ்டிரா அணிகள் மோதின. மகாராஷ்டிரா 'டாஸ்' வென்று பீல்டிங் செய்தது.பீஹார் அணியின் வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரி (7), சிக்சர் (7) மழை பொழிந்தார். 58 பந்தில் சதம் அடித்த இளம் வீரர் என சாதனை படைத்தார். பீஹார் அணி 20 ஓவரில் 176/3 ரன் எடுத்தது.மகாராஷ்டிரா அணி 19.1 ஓவரில் 182/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது .
'எப்' பிரிவு சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது. வங்கதேச அணி 2-3 என, பிரான்சிடம் தோல்வியடைந்தது. 'எப்' பிரிவில் பிரான்ஸ் அணி (9 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது.இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா (6), மீண்டும் காலிறுதி வாய்ப்பை இழந்து, 9 முதல் 16 வரையிலான இடத்துக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஹாக்கி அரங்கில் வலிமையான ஆஸ்திரேலியா அணி, கடந்த 28 ஆண்டுகளாக ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. சிலி, ஓமன் அணிகள் 'பி' பிரிவு போட்டியில் மோதின. இதில் சிலி அணி 2-0 என வெற்றி பெற்றது.
கிளாசிக் செஸ் தொடர் லண்டனில் மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர்விளையாடுகின்றனர்.இதன் ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் ரொஜெனை எதிர்கொண்டார். பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்த முடிவில் 33 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் கிருஷ்ணன் ரித் விக், சகவீரர் பகத் குஷ்சை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்கள் சந்தோஷ், பத்ரிநாத் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். ஆறு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் வெலிமிர் இவிச் (5.0) உள்ளார்.