25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


விளையாட்டு (SPORTS)

Mar 03, 2025

இந்தியாவின் இனியன் செஸ் விளையாட்டு போட்டியில் சாம்பியன்

பிரான்சில், கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் 38வது சீசன் நடந்தது. இதில் 25 நாடுகளை சேர்ந்த, 6 கிராண்ட்மாஸ்டர்ஸ், 21 சர்வதேச மாஸ்டர்ஸ் உட்பட 147 பேர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், பிரனேஷ் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய இனியன், 61வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஆராத்யா கார்க், பிரான்சின் பியர் பார்போட் மோதிய 9வது சுற்றுப் போட்டி 52வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.ஒன்பது சுற்றுகளின் முடிவில் 6 வெற்றி, 3 'டிரா' என, 7.5 புள்ளிகளுடன் இனியன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தியாவின் ஆராத்யா கார்க், நடப்பு ஜூனியர் உலக சாம்பியன் கஜகஸ்தானின் காசிபெக் நோடர்பெக் தலா 7.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். பின், ‘டை பிரேக்கரில்' ஆராத்யா 2வது, நோடர்பெக் 3வது இடம் பிடித்தனர்.

Mar 03, 2025

கால்பந்து சென்னை அணி தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது.நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.   வடகிழக்கு யுனைடெட் அணி சார்பில் நெஸ்டர் அல்பியாச் (7வது நிமிடம்), ஜித்தின் சுப்ரான் (26வது), அஜாரை (38வது) தலா ஒரு கோல் அடித்தனர்.இதுவரை விளையாடிய 23 போட்டியில், 6 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 24 புள்ளிகளுடன் சென்னை அணி 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வடகிழக்கு யுனைடெட் அணி 35 புள்ளிகளுடன் (9 வெற்றி, 8 'டிரா', 6 தோல்வி) 5வது இடத்துக்கு முன்னேறி, 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி.. 

Mar 02, 2025

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் தரவரிசை பட்டியல்.

 நார்வேயின் கார்ல்சன் (2833 புள்ளி) முதலிடத்தில் உள்ளார்.உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ் 'நம்பர்-3' ஆக உள்ளார்.பேபியானோ காருணா  4வது இடத்துக்கு சென்றார்.அர்ஜுன் எரிகைசி , 5வது இடம் பெற்றார்.பிரக்ஞானந்தா , 8வது இடம் பிடித்துள்ளார். பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹம்பி 'டாப்-10' பட்டியலில் உள்ளார். வைஷாலி (2484, 14), ஹரிகா (2483, 16) அடுத்து உள்ளனர். 

Mar 02, 2025

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக் கிறது. இதில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 379, கேரளா 342 ரன் எடுத்தன.நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது. விதர்பா அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 375 ரன் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். தர்ஷன் (51), யாஷ் தாக்கூர் (8) அவுட்டா காமல் இருந்தனர். கேரளா சார்பில் ஆதித்யா சர்வதே 4 விக்கெட் கைப்பற்றினார்.இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் 37 ரன் முன் னிலை பெற்ற விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை விதர்பா அணியின் டேனிஷ் மலேவர்.  வென்றார். தொடர் நாய கன் விருதை விதர்பா சுழற்பந்துவீச்சாளர் ஹர்ஷ் துபே (69 விக்கெட்) கைப்பற்றினார். 

Mar 02, 2025

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி வெற்றி

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி, களமிறங்கின. இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு ''ரெஸ்ட்' கொடுக்கப்பட, வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு பெற்றார். மொத்தம் 4 'ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.  பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி வெற்றிஇந்தியா (50 over) 249/9 பேட்டிங்ஸ்ரேயாஸ் 79(98), பாண்ட்யா 45(45)அக்சர் 42(61)பவுலிங்ஹென்றி 5/42 (8 ஓவர்), ஜேமிசன் 1/31 (8 )நியூசிலாந்து (45.3 over ) 205/10பேட்டிங்வில்லியம்சன் 81(120)சான்ட்னர் 28(31)யங் 22(35)பவுலிங்  வருண் 5/42 (10 ஓவர்)lகுல்தீப் 2/56 (9.3 ஓவர்)'டாஸ்'நியூசி., ('பவுலிங்' தேர்வு)ரிசல்ட் இந்தியா வெற்றி (44 ரன்)தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி (5 விக் கெட், 42 ரன், 10 ஓவர்) சாம்பியன்ஸ் டிரா பியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார். 

Feb 27, 2025

சோகத்துடன் விடைபெற்ற பாக்கிஸ்தான் மழையால் போட்டி ரத்து .

 பாகிஸ்தான், துபாயில்,ஐசிசி  சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கிறது.மொத்தம் 8 அணிகள், இரண்டு பிரிவு களாக லீக் சுற்றில் விளை யாடுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.நேற்று, ராவல் பிண்டியில் நடக்க இருந்த 'ஏ' பிரிவு லீக் போட்டி யில், ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், வங்க தேசம் அணிகள் மோத இருந்தன. ஆனால் கன மழை காரணமாக 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.  

Feb 27, 2025

, பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் செஸ் பிரக்ஞானந்தா 'டிரா "

செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ்கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன்முதல் சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செக்குடியரசின் டேவிட் நவாரா மோதினர். இதில் பிரக்ஞானந்தா இப் போட்டி 66வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் மோதிய மற்றொரு முதல் சுற்றுப் போட்டி 76வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. பிரக்ஞானந்தா, அரவிந்த், அனிஷ் கிரி, நுயென் உள்ளிட்ட 6 பேர் தலா 0.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Feb 26, 2025

சுப்மன்கில் ஐ.சி.சி., தரவரிசையில்  ‘நம்பர்-1’

 ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கவுன்சில் கிரிக்கெட்(ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீரர் சுப்மன் கில்,817 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர்,வங்கதேசம் (101*), பாகிஸ் தானுக்கு (46) எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நல்ல துவக்கம் கொடுத்தார்.பாகிஸ்தானுக்கு எதிராக சதம்(100*) விளாசிய இந்தியாவின் கோலி,743 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா(757 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார்.வங்கதேசத்துக்கு எதிராக 41* ரன் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் லோகேஷ் ராகுல்(627)15வது இடத்துக்கு முன்னேறினார்.ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவ ரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் நம்பர் -1' இடத்தில் நீடிக்கிறார்.  டில்லியில், 2023ல் நடந்த உலக கோப்பை போட்டி யில் ஆப்கானிஸ்தான் அணி (49.5 ஓவரில் 284), இங்கிலாந்தை (40.3 ឈល់ 215) 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.. நேற்றும் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

Feb 26, 2025

மொனாகோவில்  பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, வெற்றி

மொனாக்கோவில், பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, ஹரிகா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 7வது சுற்றில் இந்தியாவின் ஸ்பெயினின் ஹம்பி, சரசா தத் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 74வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.மற்றொரு 7வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஹரிகா, மங்கோலியாவின் பட்குயாக் முன்குந்தால் மோதினர். இதில் ஹரிகா, கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுறுப்பான இப்போட்டி 34வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனதுஇந்தியாவின் ஹம்பி, மங்கோலியாவின் பட்கு யாக், ரஷ்யாவின் அலெக் சாண்ட்ரா தலா 4.0 புள்ளி களுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Feb 25, 2025

பெண்களுக்கான புரோ லீக்6வதுசீசன் (2024-25) ஹாக்கி: இந்தியாவெற்றி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோலீக் 6வது சீசன்(2024,25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ் வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஒலிம்பிக், உலக சாம்பியன் நெதர்லாந்து அணிகள் மோதின.போட்டி துவங்கிய 17,28 வது நிமிடத்தில் நெதர் லாந்தின் கேப்டன் பியன் சாண்டர்ஸ்,வான்டர் பேதலா ஒரு கோல்அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 0,2என பின் தங்கியது.இரண்டாவது பாதியில் போட்டியின் 35வதுநிமிடத்தில் இந்தியாவின் தீபிகா, ஒருபீல்டு கோல் அடித்தார். அடுத்த 8வது நிமிடம் பல்ஜீத் கவுர்(43)தன் பங்கிற்கு ஒருகோல் அடித்தார். முடிவில்போட்டி 2,2 என்ற கணக்கில் சமன்ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இரு அணிகளுக்கும் தலாஐந்து வாய்ப்பு தரப்பட்டன. முதல், மூன்றாவது வாய்ப்பில் தீபிகா,மும்தாஜ்கோல் அடித்தனர். பியூட்டி, பல்ஜீத் வாய்ப்புகளை வீணடித்தனர்.நெதர்லாந்து சார்பில் மார்ஜீன் வின் மட்டும் ஒருகோல் அடித்தார். மற்றநான்கு வீராங்கனைகள் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் சவிதா தடுத்து முடிவில். இந்திய அணி 2,1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நெதர்லாந்தை வென்ற, இந்திய வீராங் கனைகள் ஒவ்வொருவருக்கும் ரூ1லட்சம்,பயிற்சியாளர்களுக்குரூபாய்50,000பரிசுஅறிவிக்கப்பட்டுள்ளது.  

1 2 ... 78 79 80 81 82 83 84 ... 93 94

AD's