இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்தப்படும்பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 'டி-20' தொடரில் மும்பை, பெங்களூரு, டில்லி, குஜராத், உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.இரு கட்டமாக, நவி மும்பை, வதோதராவில் இதன் நான்காவது சீசன் நடத்தப்படுகின்றன. நவி மும்பையில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் இரு முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன்,ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி (2023, 2025), 2024ல் கோப்பை வென்ற ஸ்மிருதி மந்தனாவின் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்திய போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் உள்ளூர் ஒருநாள் தொடர், ஜெய்ப்பூரில் நடந்த ('சி') போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின.பஞ்சாப் அணிக்கு அன்மோல்பிரீத் சிங் (57), ராமன்தீப் சிங் (72) கை கொடுத்தனர். 45.1 ஓவரில் 216 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய, மும்பை அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி 1 ரன்னில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.ஆமதாபாத்தில் நடந்த 'ஏ ' பிரிவு போட்டியில் தமிழகம், கேரளா மோதின. 50 ஓவரில் கேப்டன் ஜெகதீசன் (139) சதம் அடிக்க , தமிழக அணி 294/8 ரன் எடுத்தது.கேரள அணி 40.2 ஓவரில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணி 77 ரன்னில் வென்றது. 7 போட்டியில் 12 புள்ளியுடன் (3 வெற்றி, 4 தோல்வி), 5வது இடம் பிடித்தது.
மூன்று போட்டி கொண்ட யூத் ஒரு நாள் தொடரில் தென்ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் இரு போட்டியில் இந்தியா, 2-0 என தொடரைவென்றது. மூன்றாவது, போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவரில் 393/7 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 35 ஓவரில் 160 ரன் எடுத்தது .இந்திய அணி 233 ரன்னில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன், தொடர் நாயகனாக வைபவ் தேர்வு செய்யப்பட்டார்.ஒருநாள் தொடரில் இந்திய அணி, 3-0 என தொடரை வென்று, கோப்பை வென்றது. யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இளம் கேப்டன்வைபவ் சூர்யவன்ஷி.
பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர்,இங்கிலாந்தின்பர்மிங்ஹாமில் , பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், இத் தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, ஐரோப்பிய சாம்பியன், பிரான்சின்லாரன் பல்தயானை எதிர்கொண்டார்.முதல் செட்டை அனாஹத், 9-11, 2 வது 11-7,. 3வது செட் 3-11 4 வது செட்டில் 9-11 என தோல்வியடைந்து,.முடிவில் 1-3 என்ற செட் கணக்கில் வெள்ளிப்பதக்கம்பெற்றார். மூன்று முறை தொடர்ந்து தங்கம் வென்ற அனாஹத், பிரிட்டிஷ் ஓபன்தொடரில் 2019 (11 வயது), 2023 (15), 2025 (17), இம்முறை வெள்ளி வென்றார்.
ஜன. 13-18ல் இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில், ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டிமோதுகின்றனர். பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, வியட்நாமின்துய்லின் நகுயெனை சந்திக்கிறார்.தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில்டில்லி, போபாலில் 31 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் என,60 பதக்கம் கைப்பற்றிய ஹரியானா முதலிடம். அடுத்த இரு இடங்களை மகாராஷ்டிரா (24 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம்), ராஜஸ்தான் (15 தங்கம், 15 வெள்ளி, 21 வெண்கலம்) பிடித்தன.தமிழகத்துக்கு 6 தங்கம் கிடைத்தது. டாமன்-டையுவில் கேலோ இந்தியா பீச் விளையாட்டு ,'பென்காக் சிலாட்' (தற்காப்பு கலை) போட்டியில் வெள்ளி வென்ற தமிழகத்தின் போஸ் ராஜகுரு, செல்வகுமார் ஜோடி.
ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், எச்.ஐ.எல்., அணிகள் மோதின. எச்.ஐ.எல்., அணி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2வது வெற்றியை பதிவு செய்த எச்.ஐ.எல்., அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் தமிழகம் அணி (5 புள்ளி) உள்ளது. பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன்ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், . நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்கால், சூர்மா கிளப் அணிகள் மோதி, சூர்மா கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியைபெற்றது.
சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் *தொடர் கோல்கட்டாவில்,. நடப்பு சாம்பியன் கார்ல்சன் பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். நேற்று'ரேபிட்' முறையிலான போட்டி 3 சுற்று நடந்தன. ஆனந்த், அமெரிக்காவின் சோ வெஸ்லேவை சந்தித்து, 40 நகர்த்தலில் வெற்றி பெற்றார். 3வது போட்டியில் ஆனந்த், சக வீரர் கார்த்தி சிதம்பரத்தை வென்றார்.முதல் 3 சுற்று முடிவில் ஆனந்த் (2.5), அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் (2.5) முதல்இரு இடத்தில் உள்ளனர். விதித் குஜ்ராத்தி 4 (2.0), நிஹால் சரின் 5 (1.5), பிரக்ஞானந்தா 6 வது (1.5) இடத்தில் உள்ளனர். இந்தியாவின் வந்திகா 4 (2.0), ரக்சித்தா தேவி 6 (1.5), ஹரிகா பெண்கள் பிரிவில் ,7வது (1.0) இடங்களில் உள்ளனர். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, 3 போட் டியில் 2 'டிரா', 1 தோல்வியுடன் 9வது (1.0) இடத்தில் உள்ளார்.வைஷாலி (0.5) கடைசி இடத்தில் (10) உள்ளார்.
நாளை மும்பையில் துவங்ககிரிக்கெட் பெண்கள் பிரிமியர் லீக் 'டி-20', 4வது சீசன், கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளஐந்து அணிகளின் கேப்டன்கள் ஆஷ்லே (குஜராத்), ஜெமிமா (டில்லி), ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை), ஸ்மிருதி (பெங்களூரு), மெக் லானிங் (உ.பி.,)
கோலாலம்பூரில் ரூ.13 கோடி பரிசுத் தொகைக்கான மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-16, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜியா ஹங் ஜாசன் டெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற நேர்செட்டில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற லீஜிஜியாவை (மலேசியா) தோற்கடித்தார்.இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத்பெண்கள் ஒற்றையரில் 11-21, 11-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.இந்தியாவின் எம்.ஆர். அர் ஜூன்- ஹரிகரன் அம்சகருணன் இணை 10-21, 20-22 என்ற நேர் செட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் ஹிரோகி மிடோரிகவா- கோஹியமாஷிதா ஜோடியிடம் தோற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில்,72-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள 30 ஆண்கள்அணிகளும், 28 பெண்கள் அணிகளும் தலா 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள்லீக்கில் மோதி வருகின்றன.'எப்' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக பெண்கள் அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஜார்கண்டை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 25-7, 25-11, 25-7 என்ற செட் கணக்கில் ஜார்கண்டை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது. . தமிழக பெண்கள் அணி, இன்றுநடைபெறும் கடைசி ஆட்டத்தில் ,மராட்டியத்தை எதிர்கொள்கிறது.