சர்வதேச தரத்திலான ஹாக்கி தொடர் முதல் முறையாக மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.முதல் போட்டியில் ( 'ஏ ' பிரிவு) 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, தென் ஆப்ரிக்க அணியை, 4-0 என வெற்றி பெற்றது. டி' பிரிவில் பெல்ஜியம், நமீபியா அணிகள் மோதி, பெல்ஜியம் அணி 12-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 'டி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி 8-0 என எகிப்தை வென்றது. ஏ' பிரிவில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதின. முடிவில் அயர்லாந்து 4-3 என வெற்றி பெற்றது.
சையது மோடி சர்வதேச 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் லக்னோவில்,ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.இதில் ஸ்ரீகாந்த் 21-14, 11-4 என முன்னிலை வகித்த போது பிரியான்ஷு காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் வீரர் மன்ராஜ் சிங்கை வென்றார். இந்தியாவின் உன்னதி ஜூடோ பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் 21-15, 13-21, 21-16 என சகவீராங்கனை ரக்ஷிதா ஸ்ரீயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா 21-13, 21-19 என ஹாங்காங்கின் லோ சின் யான் ஹேப்பியை வென்றார்.இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரிசா ஜோடி ,பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் 21-15, 21-16 என துருக்கியின் பெங்கிசு, நாஸ்லிகன் ஜோடியை வென்றது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் ,தோகாவில் நடந்த பைனலில் போர்ச்சுகல், ஆஸ்திரியா அணிகள் மோதின.ஆட்டத்தின் 32வது நிமிடத்தின் போர்ச்சுகல் வீரர் அனிசியோ ஒரு கோல் அடித்தார். முடி வில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுமுதன்முறையாக உலக கோப்பை வென்றது.பிரேசில், இத்தாலி அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. முடிவில் 0-0 என சமநிலையில் இருந்தது. 'பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது இடத்தை கைப்பற்றியது. ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் மோசர் ,அதிக கோல் (8) அடித்தவருக்கான 'கோல்டன் பூட்' விருதை வென்றார்.
துபாயில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர், 19 வயதுக்கு உட்பட்ட) டிசம்பர் 12-21ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுபோட்டிகள் லீக் முறையில் நடக்கும். இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது.15 பேர் கொண்ட கொண்ட இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆயுஷ் மாத்ரே 18, கேப்டனாக தேர்வானார் . பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். துணைக் கேப்டன் விஹான் மல்ஹோத்ரா, வைபவ் சூர்ய வன் ஷிஅணிக்கு துவக்கம் தரவுள்ளனர்.அணி விபரம்: ஆயுஷ் மாத்ரே.வைபவ் விஹான், வேதாந்த், அபிக்யான், ஹர்வன்ஷ், யுவ்ராஜ் கோஹில், கனிஷ்க்,கிலன், நமன் புஷ்பக், தீபேஷ், ஹெனில், கிஷன், உதவ் மோகன், ஆரோன் ஜார்ஜ்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான உலகக்கோப்பை தொடர் ,14வது சீசன் இன்று சென்னை, மதுரையில் துவங்குகிறது.சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெல்ல காத்திருக்கிறது. கடந்த 2023 உலக தொடரில் இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 1-3 என ஸ்பெயினிடம் தோற்று, நான்காவது இடம் பெற்றது. 9 ஆண்டுக்குப் பின் (கடைசியாக 2016) இந்தியா மீண்டும் இம்முறை சாதித்தால் உலக சாம்பியன் ஆகலாம்.
சுல்தான்அஸ்லான்ஷா கோப்பைஹாக்கி 31வதுசீசன்மலேசியாவின்இபோநகரில் நடக்கும்போட்டியில்இந்தியா, மலேசியா, பெல்ஜியம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடிக்க, இந்திய அணி 3-2 என வெற்றி பெற்றது. மற்ற போட்டிகளில் கனடா அணி 3-2 என, தென் கொரியாவை வென்றது.பெல்ஜியம் அணி 9-1 என மலேசியாவை வென்றது.நான்கு போட்டிகளின் முடிவில் 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியது.
பெண்களுக்கான பிரிமீயர் லீக் (டி- 20) 4-வது சீசன் ஓவர் கிரிக்கெட் போட்டிஅடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நவிமும்பை மற்றும் வதோதராவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் வீராங்கனைகள் ஏலம் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர், எனமொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறிவைத்து ஏலம் கேட்டனர்.
பிரதமர் மோடியை , பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள் டெல்லியில் சந்தித்தனர்.அப்போது பிரதமர் மோடி, வீராங்கனைகளை பாராட்டி, இனிப்பு வழங்கினார்.
அடுத்த ஆண்டு (பிப். 6-22) குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலியில், நடக்கவுள்ளது. இதற்காக நேற்று, ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் விழா நடந்தது. இந்த ஜோதி, வரும் பிப். 6ல் துவக்க விழா நடக்கவுள்ள இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சான் சிரோ மைதானத்திற்கு வந்தடையும்
ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை தொடர் சர்வதேச ஹாக்கி கூட் டமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. இதன் 14வது சீசன் நாளை சென்னை, மதுரையில் துவங்குகிறது. இந்தியா, 'நடப்பு சாம் பியன்' ஜெர்மனி, ஆஸ் திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறும் 6 அணிகள், இரண்டாவது இடம் பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.