பெண்களுக்கான 'டபிள்யு. டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னையில், ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ஜானிஸ் டிஜென், ஜென், 2வது செட்டை 6-3 என வென்றார்.ஜானிஸ் டிஜென் இரண்டு மணி நேரம் நீடித்த பைனலில் ,6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., டூர் ஒற்றையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.
செஸ் உலக கோப்பை 11வது சீசன் கோவாவில் , இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், திவ்யா உள்ளிட்ட 206 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்தியாவின் பிரனேஷ்,கஜகஸ்தானின் சட்பெக் அக் மெடினோவா மோதினர். முதல் போட்டியில் பிரனேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் பிரனேஷ், 44வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். முடிவில் பிரனேஷ் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, அஜர்பெய்ஜானின் அகமது அகமத்ஜடா மற்றொருபோட்டியில் மோதினர். இரண்டு போட்டியிலும் 2.0-0.0 என வென்ற சூர்ய சேகர் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் துபாயில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள் ஸ்டேன் டிங் எஸ்.எச். 1' பிரிவில் இந்தியாவின் அவனி லெஹரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 626.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அவனி, 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.கலப்பு 50 மீ., 'பிஸ்டல் எஸ்.எச். 1' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின்சந்தீப் குமார் (543.6 புள்ளி), ஆகாஷ் (539.11) முதலிரண்டு இடங்களைபிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் ஆகாஷ், 223.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் (220.5) வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப் பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல் முறையாக நடந்த இந்த சாதனையைஇந்திய ரசிகர்கள் கொண்டாடினர். 13-வது சீசன் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை புறநகரான நவி மும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதினர் . திட்ட மிட்டநேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. மழையால் 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரை இறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.இந்திய அணி 50 ஓவர்களில் ,7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள், வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பையை வென்றது.
பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கையில், நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127*), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89) கைகொடுக்க, இந்திய அணி (341/5, 48.3 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (338/10, 49.5 ஓவர்) வென்றது.பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் இந்திய அணி, அதிக ரன்னை 'சேஸ்' செய்து வரலாறு படைத்து,3வது முறையாக (2005, 2017, 2025) பைனலுக்கு முன்னேறியது. நாளை, நவி மும்பையில் நடக்கவுள்ள பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் ஜெமிமா 'மேஜிக்' பேட்டிங் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு, சச்சின், கும்ளே, யுவராஜ், கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. நேற்று, டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ.1.8 கோடி கிடைத்தது.
ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடர் ஜெர்மனியில் ,பெண்கள் ஒற்றையர்காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா ('நம்பர்-34'), தைவானின் ஹிசியாங்கை ('நம்பர்-4) எதிர்கொண்டார். உன்னதி முதல் செட்டை 22-20 என கைப்பற்றினார் .அடுத்த செட்டை 21-13 என வசப்படுத்தி, முடிவில் 22-20, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பீச் மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 55 கிலோ பிரிவுபைனலில் இந்தியாவின் அஞ்சலி, 2-1 என வியட்நாமின் தோம் தாவோவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுபாஷ், 2-0 என ஈரானின் அமிராலியை வென்று, தங்கம் வென்றார்.90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், 2-1 என ஈரானின் முகமதுமதியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். மற்ற - இந்திய வீரர்கள் ரவிந்தர் (80 கிலோ), சுஜாய் (70 கிலோ) பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.இந்தியாவின் சந்திரிகா (50 கிலோ), பெண்களுக்கான குத்துச்சண்டை பைனலில் 5-0 என உஸ்பெகிஸ்தானின் கும்ரின் சோவை வென்று ,தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் ஆஹானா (50 கிலோ), வடகொரியாவின் ஜோங் ஹயாங்கை வென்று தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் குஷி சந்த் 46கிலோ பிரிவில், 4-1 என ஜின் ஜியுவை (சீனா) வென்று, தங்கம் வென்றார். இதுவரை இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம், என மொத்தம் 47 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.
பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கைவில், நடக்கிறது.இதன் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது.நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று, நடந்த 2வது அரையிறுதியில் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஒவரில் 338 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 3வது முறையாக (2005, 2017, 2025) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின். பெர்ன்ட்ரீ கல்லி, ராவ்வில்லே, எடிசன் பார்க் கிளப் அணிகளுக்காக விளையாடினார்.'T-20' போட்டிக்கு தயாராகும் வகையில், மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து, கடந்த அக். 28ல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது 'த்ரோடவுன்' முறையில் சக வீரர் ஒருவர் வீசிய பந்தை எதிர்கொண்டார் பென். தலையில் 'ஹெல்மெட்' அணிந்திருந்த போதும், பந்து கழுத்து, தலைப்பகுதியில் பலமாக தாக்கியது. உடனடியாக மயங்கி சரிந்த இவரை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 'வென்டி லேட்டர்' பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. இரண்டு நாள் சிகிச்சை பலன் தராத நிலையில், பென் மரணம் அடைந்தார். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, பென்னுக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசிய சக வீரரை, அதிகம் பாதித்து இருக்கும்.