இந்தியாவின் ஹிதேஷ், பிரீத்தி, பிரியா உள்ளிட் டோர் எலைட் குத்துச் சண்டை முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
ஸ்பெயினில்எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் ஸ்பெயினில் 21 நாடுகளை சேர்ந்த, 214 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் 5-0 என, கஜகஸ்தானின் அலியாஸ்கர் சிம்பத்தை வென்றார். பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் பிராச்சி 5-0, என ஸ்பெயினின் வனேசா மோரெல் ரமிரெசை வென்றார். கனடாவின் அலெசியாவை இந்திய வீராங்கனை பிரியா (60 கிலோ) 5-0 என, தோற்கடித்தார்.
ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா 5-0 என, நெதர்லாந்தின் பின் பாசை வென்றார் . இந்தியாவின் சச்சின் (60 கிலோ), அபினாஷ் (65), தீபக் (70), ஆகாஷ் (75), அன்குஷ் (80) மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
0
Leave a Reply