பெண்கள் பிரிமியர் லீக் பைனலுக்கு, டில்லி அணி தொடர்ந்து நான்காவது முறையாக முன்னேறியது.
பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் இந்தியாவில், நடக் கிறது.லீக் சுற்றில் பெங்களூரு அணி, 8ல் 6 வெற்றி பெற்ற பட்டியலில் முதலிடம் பெற்று, நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. வதோதராவில் நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப் பட்டியலில் 2, 3வது இடம் பிடித்த குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
குஜராத் அணி 20 ஓவரில் 168/7 ரன் எடுத்தது. டில்லி அணி 15.4 ஓவரில் 169/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. பெங்களூரு, டில்லி அணிகள் நாளை நடக்கும் பைனலில், மோத உள்ளன.
0
Leave a Reply