25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Oct 18, 2025

ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த  இந்திய  அணி பங்கேற்க தகுதி பெற்றது!

ஆசிய கால்பந்து 10வது சீசன், பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) 2026ல் சீனாவில் (ஏப்.30-மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கிர்கிஸ்தானில் நடந்தன. '' பிரிவில் நேற்று இந்தியா, உஸ்பெகிஸ்தான் மோதின..இந்திய அணி  முதல் பாதியில்என  0-1 பின்தங்கியது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த  இந்திய  அணி (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி) பங்கேற்க தகுதி பெற்றது. 

Oct 18, 2025

பெண்கள்  கிரிக்கெட் உலக கோப்பையில் தென் ஆப்ரிக்கா வெற்றி !

பெண்கள் உலக கோப்பை கொழும்புவில் நேற்று நடந்த (50 ஓவர்) லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணி 12 ஓவரில், 46/2 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின், 20 ஓவர் போட்டியாக ,விஷ்மி (34) கைகொடுக்க இலங்கை அணி 20 ஓவரில் 120/7 ரன் எடுத்தது.  தென் ஆப்ரிக்க அணி 14.5 ஓவரில் 125/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Oct 18, 2025

சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி இந்தியா  அணி  பைனலில் வெற்றி !

 சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் ,மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன .கடைசி லீக் போட்டியில்  நேற்று இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும். முடிவில் இந்திய அணி  2-1 என்ற கோல் கணக்கில்'வெற்றி பெற்றது. 5 போட்டியில் 3 வெற்றி, 'டிரா' (1 தோல்வி) 1 செய்த இந்திய அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. இத்தொடரில் 8வது முறையாக பைனலுக்கு முன்னேறிய  இந்திய அணி ,இன்று நடக்கும் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

Oct 17, 2025

ஒவ்வொரு மாதமும் சர்வதேச போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைக்கு ,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.

இந்தியாவின் அபிஷேக் சர்மா சிறந்த வீரராக தேர்வானார்.இந்தியாவின் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, ஜிம்பாப் வேயின் பிரையன் பென்னட் கடந்த செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுருக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த வீரராக அபிஷேக் தேர்வானார். கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் குவித்து (314 ரன், சராசரி 44.85, 'ஸ்டி ரைக் ரேட்' 200.00) தொடர் நாயகன் விருது வென்றார் அபிஷேக்.இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாசிறந்த வீராங்கனைக்கான விருது.தென் ஆப்ரிக்காவின் தஸ் மின் பிரிட்ஸ் ,சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, பரிந்துரைக்கப்பட்டனர். இதில் மந்தனா, சிறந்த வீராங்கனையாக தேர்வானார். கடந்த மாதம் விளையாடிய 4 ஒருநாள் போட்டியில், 2 சதம் உட்பட 308 ரன் குவித்தார் (சராசரி 77.00, 'ஸ்டிரைக் ரேட்' 135.68) மந்தனா.

Oct 17, 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள்.

 உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர், அசாமின் கவுகாத்தியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, சீனாவின் லி யுவான் சன் மோதினர்.தான்வி 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் ஞான தத்து, அமெரிக்காவின்காரெட்டான் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் மோதினர். ஞானதத்து 15-12, 15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இந்தியாவின் பவ்யா சாப்ரா, விஷாகா  ஜோடி ,கலப்பு  இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் 12-15, 15-11, 15-12 என்ற கணக்கில் பிரான்சின் திபோட்ஸ் கார்டன், அகதே குவேஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். .

Oct 17, 2025

இந்தியாவுக்கு  ஆசிய பாரா டேபிள் டென்னிசில் இரண்டு வெண்கலம் !

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்  சீனாவின் பீஜிங் நகரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 1') அரையிறுதியில் இந் தியாவின் ஜெகன் மதன், தென் கொரியாவின் சாங்கு ஜியோங்மோதினர். ஜெகன் மதன் 0-3 (6-11, 1-11, 8-11) என்ற கணக்கில்தோல்வியடைந்து வெண்கலம் வென்றார். இந்தியாவின் சந்தீப் டாங்கி 0-3 (0-11, 1-11, 6-11) என, தென் கொரியாவின் ஹாக்ஜின் கிம். மிடம் தோல்வியடைந்து மற்றொரு அரையிறுதியில் வெண்கலம் கைப்பற்றினார்  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ,ஆசிய பாரா டேபிள் டென்னிஸ்  வரலாற்றில், இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் கிடைத்தது.

Oct 16, 2025

ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்டதொடரில்  ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.நேற்று இரண்டு பிரிவுகளாக  ,ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.ஆஸ்திரேலிய மண்ணில் சீனியர் வீரர்கள் செயல்பாடு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். ரோகித், கோலிக்கு இது சிறந்த தொடராக அமையும்," என்றார்.காம்பிர்  "உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு சிறந்த அணியை உருவாக்குவோம்  என்றார்.

Oct 16, 2025

'பிபா' உலக கோப்பை கால்பந்து 'பிபா' உலக கோப்பை கால்பந்து 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர்.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026 ல் (ஜூன் 11-ஜூலை 19) நடக்க உள்ள, 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன.நான்காவது கட்ட  ஆசிய அணிகளுக்காக நடந்தது. சொந்த மண்ணில் கத்தார் அணி 2-1 என ஐக்கிய அரபு எமி ரேட்சை ('ஏ' பிரிவு) வென்றது. 'பி' பிரிவில் சவுதி அரேபிய அணி, ஈராக்குடன் 'டிரா' (0-0) செய்தது. இருபிரிவிலும் முதலிடம் பெற்ற கத்தார், சவுதி அரேபிய அணிகள் உலக கோப்பைதொடருக்கு தகுதி பெற்றன. 

Oct 16, 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர்.

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அமெரிக்காவின் ஆலிஸ் வாங் மோதினார். இதில் உன்னதி ஹூடா 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறினார். இந்தியாவின் தான்வி 15-12, 15-7 என, இந்தோனேஷியாவின் வினார்டோவை மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ஸ்ரீ 11-15, 15-5, 15-8 கணக்கில் சிங்கப்பூரின் ஆலியா ஜகாரியாவை வென்றார்.

Oct 16, 2025

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சஹாஜா வெற்றி.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 347 வது இடத்திலுள்ள இந்தியாவின் சஹாஜா, முன்னாள் 'நம்பர்-3' வீராங்கனை, யு. எஸ்., ஓபன் கிராண்ட்ஸ் லாம் கோப்பை (2017) வென்ற அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார்.ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் சஹாஜா, 6-2, 6-2 என்ற நேர் செட் - கணக்கில் வெற்றி பெற்று, - இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

1 2 ... 94 95 96 97 98 99 100 ... 171 172

AD's



More News