ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் 2027-ம் ஆண்டு மே 12 முதல் 29 வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 35 அணிகள் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன.
'ஈ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, மலேசியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
0
Leave a Reply