சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. 2024 ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியானது. விளையாட்டின் உயரிய, மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா' விருது, இம்முறை நான்கு நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. 'கேல் ரத்னா' விருதுக்கு (2024) குகேஷ், மனுபாகர், ஹர்மன்பிரீத் சிங், பிரவீன் குமார் தேர்வு செய்யப்பட்டனர். 32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.தமிழக விளையாட்டு துறையின் வளர்ச்சியை, உலக அரங்கில் உயர்த்தி பிடித்த, நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.
கேரள மாநிலம் கண்ணுாரில், தேசிய வாள்சண்டை போட்டி சாம்பியன்ஷிப் 35வதுசீசன்நடக்கிறது.பெண்களுக்கான 'சாப்ரே' பிரிவு பைனலில் தமிழகத்தின் பவானி தேவி, கேரளாவின் சன்னி அல்கா மோதினர். அபாரமாக ஆடிய பவானி 15-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பவானி தேவி தேசிய சாம்பியன்ஷிப் அரங்கில் வென்ற 12வது தங்கப்பதக்கம். ஆண்களுக்கான 'போயில்' பிரிவில் பிபிஷ், ஆண்களுக்கான 'சாப்ரே' பிரிவில் கிஷோநிதி ,தலா ஒரு தங்கம் வென்றனர். இத்தொடரில் மூன்று தங்கம் வென்ற தமிழகம், தனிநபர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது.பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக (2019, 2024) சாம்பியன் ஆனார்.அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்துதல்) முறையில் போட்டி நடந்தது. 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் வைஷாலி (தமிழகம்). 9.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, 'நாக் அவுட்' முறையிலான காலிறுதிக்கு முன்னேறினார்.முதல் போட்டியில் 'டிரா' செய்த வைஷாலி, அடுத்த இரு போட்டியில் சறுக்கினார். இதையடுத்து 0.5-2.5 என தோல்வியடைந்து, வெண் கலப்பதக்கம் பெற்றார். "கடந்த 2021 முதல் இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உலக 'ரேபிட்' தொடரில் ஹம்பி சாம்பியன் ஆனார். 'பிளிட்ஸ்' தகுதிச்சுற்றில் வைஷாலி சிறப்பாக செயல்பட்டார். அடுத்து வெண்கலம் வென்றது மகிழ்ச்சி,'' என சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவர், இந்தியாவின் ஆனந்த் கூறினார்.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியாலீக்6வது சீசன்நடக் கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்கால், கோனாசிகா (விசாகப்பட் டினம்) அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டி யில் ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்கால் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான உலக 'ரேபிட்' பிரிவில் இந்தியா வின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக ப (2019, 2024) சாம்பியன் ஆனார். அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்து தல்) முறையில் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் 11வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி (தமிழ கம்), அமெரிக்காவின் காரிஸ்சா மோதிய போட்டி 'டிரா' ஆனது.இதையடுத்து 11 சுற்றில் 8 வெற்றி, 3 'டிரா' செய்த வைஷாலி, மொத்தம் 9.5 புள்ளி பெற்று,முதலிடம் பிடித்தார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் போபாலில் நடக்கும், 10மீ.,ஏர் ரைபிள் பிரிவில் மகாராஷ்டிராவின் அனன்யா நாயுடு, தங்கம் வென்றார். தமிழகத்தின் நர்மதா நிதின், வெண்கலம் பெற்றார்.
மஸ்கட்டில் பெண்களுக்கான ஜூனியர் ஆசிய ஹாக்கி (டிச. 7-15) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, நடப்பு சாம்பியனான இந்திய அணியினர், பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர்.
இந்தியாவில் பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நேற்று துவங்கியது. இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பிரிவிலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் பாதியில் இந்திய அணி 16-10 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் ஹாங்காங் அணி ஆதிக்கம் செலுத்த,முடிவில் இந்திய அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.