288 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட வத்தல் மண்டபத்தில் 288 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை (17.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாத்திடவும், பிறர் துணையின்றி தங்களது தேவையினை தாய்களே பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என்பதனை உறுதி படுத்திடவும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் எனும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பல்வேறு தடைகளை நீக்குதல், அனைத்து நிலைகளிலும் சமத்துவமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், எளிதான முறையில் அரசின நலத்திட்டங்களை கிடைக்கச் செய்தல், வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்பு உறுதி செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசால் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், பிசியோதெரபி சிகிச்சை, ஆக்குபேசனல் தெரபி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி, கண் பரிசோதனை போன்றவை வழங்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 6 இடங்களில் வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் இளந்தோப்பு, ராமசாமி ராஜா அரசு மருத்துவமனை, நரிக்குடி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகர் கன்னிசேரி புதூர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், காரியாபட்டி காட்டுகுத்தகை கரிசல்குளம், பெண்கள் பிரிவு, அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை பந்தல்குடி, பல் மருத்துவ பிரிவு, நகர்புற சுகாதார மையம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆண்டுதோறும் ALIMCO நிறுவனத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் NLC India Limited நிறுவன CSR நிதியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வினை மேம்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன செயல் இயக்குநர் திரு.மூர்த்தி, மனித வள மேலாண் இயக்குநர் திரு.சமீர் சுவரப், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வ.செந்தில்வேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply