தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது.
உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம்1ம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏன் மே1ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்று கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாதுமே தினமும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. உழைப்பாளர்கள் முற்காலத்தில்12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில்20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம் ஆகும்..முன்பு உள்ள மக்கள் ஓய்வில்லமால்தொடர்ந்துவேலை பார்த்துகொண்டே இருந்தார்கள் .அவர்களின்உழைப்பிற்குஏற்ற ஊதியமும்கிடைக்கவில்லை.
1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரத்தில்2.5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், மில்வாக்கி, பிலடெல்பியா, சின்சினாட்டி, பிட்ஸ்பர்க், பால்டிமோர், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும்3.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.இதை எதிர்த்து சிகாகோ நகரத்தில்1886ம் ஆண்டு மே1ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமே தொழிலாளர் தினம் உருவானதற்கு காரணமாக இருந்தது.தொழிலாளர்களின் துன்பத்தை கண்டறிந்து,முதலாளிகள் தங்களதுஉழைப்பை சுரண்டுகின்றனர் என்பதைஅறிந்து உலகதொழிலாளர்கள் அனைவரும்ஒன்றுசேர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டனர்.உழைப்பாளர்கள் ஒன்று சேர்வதற்கு அடிக்கல் நாட்டியவர் காரல் மார்க்ஸ்.உழைப்பு இல்லாமல் எந்த ஒரு பொருளும் உருவாகாது என்பதை உணர்ந்தும், ஆனால் இங்கு தொழிலாளர்கள் ஐந்தறிவு ஜீவன்களை விட கீழ்த்தரமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் நினைத்தனர்.
முக்கிய கோரிக்கை தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது தான். இந்த கோரிக்கை 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி நடைபெற்றது.தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை தாங்க முடியாமால் அரசு1890ம் ஆண்டு ஏற்று8 மணி நேர வேலைக்கு ஒத்துக்கொண்டது. இதன் விளைவாக உருவானது தான் தொழிலாளர் தினம்.தற்போது80நாடுகளுக்குமேல்இந்ததினத்தைகொண்டாடிவருகின்றனர். இந்தியாவில்முதன் முதலில்1923ம் ஆண்டும.சிங்காரவேலர் என்பவர்மெரினா கடற்கரையில் செங்கொடியைஏற்றி கொண்டாடினார்.இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் உழைப்பாளிகள் சிலை எழுப்பப்பட்டது, இது 1959-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா1990ம் ஆண்டு மே தினப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது.
0
Leave a Reply