25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாமானது 100 சதவீத உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு  மாவட்டந்தோறும் 18.07.2026. 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில்  நடத்தப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 18.07.2026 அன்று, வத்திராயிருப்பு வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகர் வட்டம் -வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,  

25.07.2026 அன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காரியாபட்டி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிவகாசி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,01.08.2026 அன்று, இராஜபாளையம் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,   08.08.2026அன்று,  வெம்பக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகமானது நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News