விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் தேரோட்டம்
அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.எம்.மான்ராஜ் அவர்கள் மற்றும்திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.வெங்கட்ராமராஜா(சேர்மன்- ராம்கோ குழுமம்)ஆகியோர் திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.இவ்விழா.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் வீதி உலா வந்தது.
ஆடிப்பூரத்தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன்,திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.கு.ஆறுமுகம், திருக்கோவில் செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply