25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"யுகாதி"கொண்டாட்டம்

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.உகாதி என்கிற சொல் சமசுகிருதம் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமசுகிருதத்தில்"யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும்,"அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் கணப்படுகிறது."ஓர் ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில்"உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.உகாதி சித்திரை மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது. பெரும்பாலும், இப் பண்டிகை, ஆங்கில நாட்காட்டியின் படி, மார்ச்சு மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வருகிறது.கர்நாடக மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறது

தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளிவெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது

மகாராட்டிரம் மாநில இந்துக்களால் இந்த நாள் குடீ பாடவா என்று கொண்டாடப்படுகிறது. .

சிந்து மாகாணம், சிந்தி இன மக்கள் இதனை சேட்டி சந்த் என்று கொண்டாடுகிறார்கள்

மணிப்பூர் வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.

பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News