சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 நிறைவடைந்ததை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 (23.04.2026) அன்று நிறைவடைந்ததை முன்னிட்டு, மாவட்டத்தின் 7-சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU), கட்டுப்பாட்டு இயந்திரங்கள்(CU), விவிபேட் இயந்திரங்களை (VVPAT) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது.
அதன்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 538 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 269 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 309 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 309 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 315 விவிபேட் இயந்திரங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 584 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 294 விவிபேட் இயந்திரங்களும்,
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 292 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 296 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 281 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 281 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 281 விவிபேட் இயந்திரங்களும்,
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 542 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 271 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 272 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 586 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 293 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 297 விவிபேட் இயந்திரங்களும், என மொத்தம் 2,001 வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட 3,132 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,007 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,024 விவிபேட் இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைத்து சீல் செய்யப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சிசிடிவி உடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டி வாயிலாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் கண்காணித்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உயர் நிலையான அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply