25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சுருள்முடியினை நேராக்கும் இயற்கை வழி Straightening.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுருள்முடியினை நேராக்கும் இயற்கை வழி Straightening.

சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியினை நேராக்க இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்கள் கொண்டு செய்யலாம்.

ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் பால் மற்றும் போதுமான அளவு சேம்பு சேர்த்து கூந்தலுக்கு ஸ்ப்ரே அடிப்பது போல் பயன்படுத்தி பின்னர் தலைக்கு குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.

இரண்டு முட்டையுடன் போதுமான அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கூந்தலுக்கு தடவி சுமார் 20 நிமிடங்கள் உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்துவிட நல்ல மாற்றம் தெரியும்.

கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கும் நிலையில் இந்த வாழைப்பழத்தை கூந்தலுக்கு ஹேர் பேக் போல் பயன்படுத்தலாம். 

2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், முட்டை ஒன்றை சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தவும். 30 நிமிடங்கள் விட்டு, குளிர்ந்த நீரில் குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.

கால் காப் அரிசி மாவுடன் முட்டை ஒன்று, முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, கூந்தலுக்கு பன்படுத்தவும். ஒரு மணி நேரத்திற்கு பின் கூந்தலை சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

கூந்தல் ஆரோக்கியம் காக்கும் கற்றாழை ஜெல்லினை மிதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து அரைத்து கூந்தலுக்கு பயன்படுத்தவும். பின், 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவிடவும்.

ஒரு ஸ்பூன் தேங்காய் பாலுக்கு கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு என கலந்து கூந்தலுக்கு ஸ்ப்ரே போல் பயன்படுத்தவும் பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க நல்ல பலன் கிடைக்கும்

2 ஸ்பூன் தயிருக்கு 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் வாழைப்பழ திப்பை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News