25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல் குறிப்பு

Apr 28, 2024

சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது 

அரைத்து விட்ட சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது கொஞ்சம் அதனுடன் கசகசாவை சேர்த்து வறுத்து அரைத்து சேர்த்தால் சாம்பாரின் மணமும், குணமும் அலாதியானதாக மாறிவிடும். சாம்பார் கெட்டியாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.வீட்டில் டீ தயாரிக்க நீரை கொதிக்க விடும்போது ஒரே ஒரு புதினா இலையும் போட்டு கொதிக்க விட்டு பாருங்கள். டீயின் மனமும் ருசியும்அபாரமாக இருக்கும். ரசம் தயாரிக்கும் போது சுண்டக்காய் அளவு இஞ்சி சேருங்கள், சூப்பராக ரசம் இருக்கும்.இட்லிக்கு மாவாட்டும் போது ஒரே ஒரு ஆமணக்கு விதையை தோல் நீக்கி போட்டுப் பாருங்கள் இட்லி மெது மெது என்று இருக்கும். காட்டு நெல்லிக்காயை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள், வைட்டமின்குறையாத ஊறுகாய் ரெடி. தேவை பட்டால் மிளகாய் பொடியும் போட்டுக் கொள்ளலாம். 

Apr 24, 2024

சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்ட பின்....

கிச்சனில் வெகு நேரம் நின்று சமைப்பது மிகவும் கடினம் என்றால், அதைவிடக் கடினம் கிச்சனில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது. அப்படி கிச்சனில் பொதுவாக நடக்கும் , குக்கரில் பருப்பு பொங்கி விடுவது, சிங்க்ல் அடிக்கடி கரை படிந்து விடுதல் மற்றும் பாத்திரங்களில் துருப்பிடித்து விடுவது போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் .குக்கரில் பருப்பு காய்கறிகள் போன்றவற்றை வேக வைக்கும்போது அது பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். இதனால், குக்கரைக் கழுவுவதற்கும், கேஸ் ஸ்டவ்வை துடைப்பதற்கும் கஷ்டமாக இருப்பதால், இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இனி பருப்பு மற்றும் காய்கறிகளை குக்கரில் வேகவைக்கும் போது உள்ளே ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு வேக வையுங்கள். இப்படி செய்தால் குக்கரை விட்டு தண்ணீர் வெளியே பொங்கி வழியாமல் இருக்கும். அதேபோல நீங்கள் பயன்படுத்தாத பாத்திரங்களில் துருப்பிடித்து விட்டதா? எவ்வளவு தேய்த்துக் கழுவினாலும் போகவில்லையா? இதை எளிதாக சுத்தம் செய்ய, கொஞ்சமாக டூத் பேஸ்ட்டை துருப்பிடித்துள்ள இடத்தில் வைத்து உப்பு காகிதம் போட்டு தேய்த்தால், துருக்கரை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்இலைகள் உள்ள காய்கறியை வாங்கும் பொழுது அது நமக்கு கூட்டு மற்றும் சூப் தயாரிக்க உதவும். குறிப்பாக முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகளில் இலைகளோடு சேர்த்து வாங்கிக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது. அதன் இலைகளை நறுக்கி சூப் செய்து குடிக்கலாம்.சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்டபின் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சேர்த்துக் கொள்ளுங்கள்! இதனால் கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது'

Apr 14, 2024

வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்க...

எலுமிச்சம் பழத்தை சிறிது நேரம் சுடுநீரில் போட்டு பின் சாறு பிழிந்தால் அதிகமாகசாறு கிடைக்கும். வேகவைத்த சர்க்கரை வள்ளிகிழங்கை உடனே ஜில் தண்ணீரில் போட்டால் தோலை ஈசியாக உரித்து விடலாம். வீட்டில் எலி நடமாடும் இடங்களில் மிளகுத்தூளை தூவினால் எலி அந்த இடத்தில் தலை வைத்து படுக்காது. வடக கஞ்சி வடாம் போடும் போது சிறிது ஆற வைத்த பால் அல்லது மோர் சேர்த்தால் வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்கும் .  'வெல்லத்தை துருவ வேண்டும் என்றால் ,காய்கறி துருவலில் வைத்து துருவினால் ,கடினம் இல்லாமல் சீக்கிரமாக வெல்லத்தை தூளாக்கி விடலாம்..

Apr 11, 2024

தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும்

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது. இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவை வைக்கலாம்.நீங்கள் காய்கறி பிரிஞ்சி, புலாவ் மற்றும் பிரைட் ரைஸ் போன்ற ஐட்டங்களை செய்யும் பொழுது கொஞ்சம் சோளத்தை வேக வைத்து சேர்த்தால் சாப்பாடு ருசியாக அமையும், மேலும் பார்ப்பதற்கு அட்டகாசமான நிறத்தில் சூப்பராக இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Apr 10, 2024

போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.

கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும். போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.  ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும். புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்

Apr 09, 2024

தோசை மொறுமொறுவென்று இருக்க....

கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.வேர்க்கடலையை வறுத்து தூளாக்கி ஒரு பாட்டிலில் சேர்த்துக்கொள்ளவும். கிரேவி வகைகள், சரியான பதத்தில் இல்லாமல் சிறிது நீர்த்து இருக்கும் போது, இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை தூளைக் கலந்திட, கெட்டியாகவும் சுவையாகவும் கிரேவி இருக்கும்.

Mar 11, 2024

ஆப்பம் அதிக மென்மையாக  இருக்க....

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்அரிசியை காற்று புகாத பாத்திரங்களில் கொட்டி வைத்தால் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கலாம். இந்த பாத்திரங்களில்4 அல்லது5 வேப்பிலைகளுடன் சிறிது காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் அரிசியில் பூச்சிகள் வராது. பூஞ்சைகள்உருவாவதையும்  தடுக்கலாம். ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து,நெய்யில் வறுத்து சேர்த்து, 4 டீஸ்பூன் பால் பவுடரையும் கலந்து ,சுவையான ல ட்டு. உருவாக்கலாம்துவையல் அரைக்கும்போது, மிளகாயை தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது.துவரம்பருப்பை வேக வைக்கும்போது ,ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

Mar 04, 2024

பச்சை பட்டாணி நிறம் மாறாமல் இருக்க....

எந்த கிழங்கை வேக வைத்தாலும்10நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும்.சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். எந்த சுண்டல் செய்தாலும் இறக்குவதற்கு முன் இந்த பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் நீங்கும்ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான் கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும் தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம் வாசனையாக இருக்கும்.பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.காய்கறிகள் சமைக்கும்போது பார்லி பவுடரை சிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Feb 29, 2024

உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க....

வற்றல் குழம்பு கொதித்த பின், நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க சிறிது புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீரத்தன்மையை புளிஎடுத்துவிடும்.காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் ,சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும். சாம்பார், குழம்பு ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்தால் மணமும், சுவையும் கூடும்.கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் சுவையாகவும் இருக்கும்.சீக்கிரம் ஊசியும் போகாது.

Feb 26, 2024

இனிப்பு வகையை செய்ய சர்க்கரையை விட கற்கண்டை பொடியாக்கி போட்டால் அதன் சுவை கூடும்.

காரக்குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் சிறிது தேங்காய்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால் காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.ரசத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். உடலுக்கும் நல்லது. புளி அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.எண்ணை பிசுக்கு நீங்க கேஸ் ஸ்டவ்வை கடைசியாக டிஷூவால் துடையுங்கள்.எந்த இரு இனிப்பு வகையை செய்தாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடியாக்கி போட்டால் அதன் சுவை கூடும்.குருமாவுக்கு காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாம வாங்க வேண்டும் இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.

1 2 ... 5 6 7 8 9 10 11 12 13 14

AD's



More News