வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்க...
எலுமிச்சம் பழத்தை சிறிது நேரம் சுடுநீரில் போட்டு பின் சாறு பிழிந்தால் அதிகமாகசாறு கிடைக்கும்.
வேகவைத்த சர்க்கரை வள்ளிகிழங்கை உடனே ஜில் தண்ணீரில் போட்டால் தோலை ஈசியாக உரித்து விடலாம்.
வீட்டில் எலி நடமாடும் இடங்களில் மிளகுத்தூளை தூவினால் எலி அந்த இடத்தில் தலை வைத்து படுக்காது.
வடக கஞ்சி வடாம் போடும் போது சிறிது ஆற வைத்த பால் அல்லது மோர் சேர்த்தால் வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்கும் .
'வெல்லத்தை துருவ வேண்டும் என்றால் ,காய்கறி துருவலில் வைத்து துருவினால் ,கடினம் இல்லாமல் சீக்கிரமாக வெல்லத்தை தூளாக்கி விடலாம்..
0
Leave a Reply