தோசை மொறுமொறுவென்று இருக்க....
கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.
ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்
பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.
வேர்க்கடலையை வறுத்து தூளாக்கி ஒரு பாட்டிலில் சேர்த்துக்கொள்ளவும். கிரேவி வகைகள், சரியான பதத்தில் இல்லாமல் சிறிது நீர்த்து இருக்கும் போது, இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை தூளைக் கலந்திட, கெட்டியாகவும் சுவையாகவும் கிரேவி இருக்கும்.
0
Leave a Reply