25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஏப்ரல் 9 - புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டமன்றத் தேர்தல்; வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏப்ரல் 9 - புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டமன்றத் தேர்தல்; வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்.

புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 விடுமுறை:

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தங்களது சொந்த மாநிலங்களில் வாக்குரிமை பெற்றுள்ள இத்தொழிலாளர்கள், தேர்தல் நடைபெறும் நாளான 09.04.2026 அன்று தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை அந்தந்தத் தொழிற்சாலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் அல்லது மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 புகார் தெரிவிக்கத் தொடர்பு எண்கள்:

 தேர்தல் நாளன்று வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்:

 

 திரு. இரா. இரவிச்சந்திரன் – 94435 52902

 திரு. பி. இராஜ்குமார் – 93447 45064

 

 ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது அந்தந்த நிறுவனங்களின் சட்டப்பூர்வக் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News