25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

May 13, 2024

தேங்காய் பர்பி உதிராமல் இருக்க...

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.தேங்காய் பர்பி செய்யும்போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பரபி செய்தால் பர்பி  நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும். உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

May 02, 2024

எலுமிச்சை ,தேங்காய் ,புளி ,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் .....

பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது பச்சையாக உணவில் சேரத்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட்  நீண்ட நாட்கள்  கெடாமல் இருக்கும். வாழைக்காய் மற்றும்வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென பால் ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொறு மொறுவென இருக்கும்.எலுமிச்சை,தேங்காய்,புளி,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

Apr 30, 2024

முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க....

உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

Apr 29, 2024

சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது 

அரைத்து விட்ட சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது கொஞ்சம் அதனுடன் கசகசாவை சேர்த்து வறுத்து அரைத்து சேர்த்தால் சாம்பாரின் மணமும், குணமும் அலாதியானதாக மாறிவிடும். சாம்பார் கெட்டியாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.வீட்டில் டீ தயாரிக்க நீரை கொதிக்க விடும்போது ஒரே ஒரு புதினா இலையும் போட்டு கொதிக்க விட்டு பாருங்கள். டீயின் மனமும் ருசியும்அபாரமாக இருக்கும். ரசம் தயாரிக்கும் போது சுண்டக்காய் அளவு இஞ்சி சேருங்கள், சூப்பராக ரசம் இருக்கும்.இட்லிக்கு மாவாட்டும் போது ஒரே ஒரு ஆமணக்கு விதையை தோல் நீக்கி போட்டுப் பாருங்கள் இட்லி மெது மெது என்று இருக்கும். காட்டு நெல்லிக்காயை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள், வைட்டமின்குறையாத ஊறுகாய் ரெடி. தேவை பட்டால் மிளகாய் பொடியும் போட்டுக் கொள்ளலாம். 

Apr 25, 2024

சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்ட பின்....

கிச்சனில் வெகு நேரம் நின்று சமைப்பது மிகவும் கடினம் என்றால், அதைவிடக் கடினம் கிச்சனில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது. அப்படி கிச்சனில் பொதுவாக நடக்கும் , குக்கரில் பருப்பு பொங்கி விடுவது, சிங்க்ல் அடிக்கடி கரை படிந்து விடுதல் மற்றும் பாத்திரங்களில் துருப்பிடித்து விடுவது போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் .குக்கரில் பருப்பு காய்கறிகள் போன்றவற்றை வேக வைக்கும்போது அது பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். இதனால், குக்கரைக் கழுவுவதற்கும், கேஸ் ஸ்டவ்வை துடைப்பதற்கும் கஷ்டமாக இருப்பதால், இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இனி பருப்பு மற்றும் காய்கறிகளை குக்கரில் வேகவைக்கும் போது உள்ளே ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு வேக வையுங்கள். இப்படி செய்தால் குக்கரை விட்டு தண்ணீர் வெளியே பொங்கி வழியாமல் இருக்கும். அதேபோல நீங்கள் பயன்படுத்தாத பாத்திரங்களில் துருப்பிடித்து விட்டதா? எவ்வளவு தேய்த்துக் கழுவினாலும் போகவில்லையா? இதை எளிதாக சுத்தம் செய்ய, கொஞ்சமாக டூத் பேஸ்ட்டை துருப்பிடித்துள்ள இடத்தில் வைத்து உப்பு காகிதம் போட்டு தேய்த்தால், துருக்கரை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்இலைகள் உள்ள காய்கறியை வாங்கும் பொழுது அது நமக்கு கூட்டு மற்றும் சூப் தயாரிக்க உதவும். குறிப்பாக முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகளில் இலைகளோடு சேர்த்து வாங்கிக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது. அதன் இலைகளை நறுக்கி சூப் செய்து குடிக்கலாம்.சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்டபின் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சேர்த்துக் கொள்ளுங்கள்! இதனால் கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது'

Apr 24, 2024

காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் நீங்க….

கோடை காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து விடும். அப்படி புளிக்காமல் இருக்க அதில் இஞ்சி ஒரு துண்டு மற்றும் தேங்காய் பத்தை ஒரு துண்டு போட்டு வைத்தால் சீக்கிரம் புளிக்காது.நாம் வெங்காயம் நறுக்கும் போது கண்களில் தண்ணீர் வராமல் இருக்க கத்தியை அடுப்பில் சூடு செய்து விட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராதுவாழை இலையின் பின் பக்கத்தை லேசாக நெருப்பின் அணலில் காட்டி அதன் பிறகு அதனை எவ்வளவு சுருட்டி பொட்டலம் போட்டாலும் கிழியாமல் இருக்கும்.காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி வந்ததும், அதனை தண்ணீரில் போட்டு ஒரு சில துளிகள் வினிகர் ஊற்றி வைத்தால் காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் இறந்து விடும்.வெண்டைக்காய் காரக்குழம்பு செய்யும்போது வெண்டைக்காயை முதலில்2 ஸ்பூன் எண்ணெயில் நன்கு வதக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் அதிலிருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி சுருள வதங்கி விடும். அதன் பின் காரக் குழம்பில் சேர்த்தால் குழம்பின் ருசியே அலாதி.     

Apr 15, 2024

வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்க...

எலுமிச்சம் பழத்தை சிறிது நேரம் சுடுநீரில் போட்டு பின் சாறு பிழிந்தால் அதிகமாகசாறு கிடைக்கும். வேகவைத்த சர்க்கரை வள்ளிகிழங்கை உடனே ஜில் தண்ணீரில் போட்டால் தோலை ஈசியாக உரித்து விடலாம். வீட்டில் எலி நடமாடும் இடங்களில் மிளகுத்தூளை தூவினால் எலி அந்த இடத்தில் தலை வைத்து படுக்காது. வடக கஞ்சி வடாம் போடும் போது சிறிது ஆற வைத்த பால் அல்லது மோர் சேர்த்தால் வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்கும் .  'வெல்லத்தை துருவ வேண்டும் என்றால் ,காய்கறி துருவலில் வைத்து துருவினால் ,கடினம் இல்லாமல் சீக்கிரமாக வெல்லத்தை தூளாக்கி விடலாம்..

Apr 12, 2024

தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும்

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது. இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவை வைக்கலாம்.நீங்கள் காய்கறி பிரிஞ்சி, புலாவ் மற்றும் பிரைட் ரைஸ் போன்ற ஐட்டங்களை செய்யும் பொழுது கொஞ்சம் சோளத்தை வேக வைத்து சேர்த்தால் சாப்பாடு ருசியாக அமையும், மேலும் பார்ப்பதற்கு அட்டகாசமான நிறத்தில் சூப்பராக இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Apr 11, 2024

போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.

கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும். போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.  ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும். புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்

Apr 10, 2024

தோசை மொறுமொறுவென்று இருக்க....

கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.வேர்க்கடலையை வறுத்து தூளாக்கி ஒரு பாட்டிலில் சேர்த்துக்கொள்ளவும். கிரேவி வகைகள், சரியான பதத்தில் இல்லாமல் சிறிது நீர்த்து இருக்கும் போது, இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை தூளைக் கலந்திட, கெட்டியாகவும் சுவையாகவும் கிரேவி இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News