கருப்பு கவுனி அரிசி கஞ்சி.
தேவையான பொருட்கள் -
கருப்பு கவுனி அரிசி – 100 கிராம்,தண்ணீர் - 6 கப், உப்பு- தேவையானஅளவு.
செய்முறை -
அரிசியை மிக்சியில் ரவா போல் பொடி பண்ணவும். ஒரு குக்கரில் பொடித்த அரிசியை போட்டு, 6 கப் தண்ணீர் ஊற்றவும்.
அதில் உப்பு சேர்த்து 3விசில் விடவும். இப்போது சத்தான கருப்பு கவுனி கஞ்சி ரெடி, இந்த கஞ்சியில் தயிர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.
இந்த அரிசியை ஊறவைத்து செய்தால் ரொம்ப ஹாடா இருக்கும். நேரடியாக செய்தால் சாஃப்ட்டாக, சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
0
Leave a Reply