வரகு அரிசி கஞ்சி .
தேவையான பொருட்கள்-
வரகு அரிசி- 50 கிராம்,எண்ணெய் - 1 தேக்கரண்டி,சீரகம் -1/4 தேக்கரண்டி,
சிட்டிகை மஞ்சள் தூள் -2 சிட்டிகை,சின்னவெங்காயம் - 10,பூண்டு- 5 பல்,
தக்காளி – 1/2,கொத்தமல்லி இலை- சிறிதளவு, தண்ணீர், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை -
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து , ஒன்றும் பாதியுமாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின் 10 நிமிடம் ஊற வைத்த வரகு அரிசியை தண்ணீர் வடித்து, சேர்த்து வதக்கவும்.விருப்பப்பட்டால் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ,உப்பு சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி அரை மணி நேரம் சிறு தீயில் வேக விடவும். ஆரோக்கியமான வரகு அரிசி கஞ்சி தயார். இதனை தினமும் காலை 11 மணி அளவில் தொடர்ந்து குடித்துவந்தால்
சீக்கிரமாக உடல் எடையை குறைக்கும்.
நார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு.
0
Leave a Reply