25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் தைராய்டு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் தைராய்டு .

ஹார்மோன் குறைவாக சுரப்பதே'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். தைராய்டுஉடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் உருவாகும். இந்த ஹார்மோன் குறைபாடு, இந்தியாவில் பத்து பேரில் ஒருவருக்கு உள்ளது. இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.

அயோடின் கலந்த உப்பு, மீன், இறால் போன்ற கடல் உணவுகள்(ஒமேகா-3 சத்து), செலினியம் நிறைந்த கோழி, காளான், பூண்டு, பால் பொருட்கள், முட்டை, முழு தானியங்கள்(பழுப்பு அரிசி, ஓட்ஸ்), மெலிந்த புரதங்கள், காய்கறிகள், பெக்டின் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள், சோயா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், காபி, மதுபானங்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள சில கூறுகள் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News