குதிரைவாலி அரிசி கஞ்சி.
தேவையான பொருட்கள் -
குதிரைவாலி அரிசி -50 கிராம்,பாசிப்பருப்பு- 25 கிராம்,
எண்ணெய்- 1 மேஜை கரண்டி,பெரிய வெங்காயம்-1/2,
பூண்டு- 4 பல்,தக்காளி - 1/2,மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி,
தண்ணீர், உப்பு- தேவையானஅளவு,கொத்தமல்லி இலை - சிறிதளவு.
செய்முறை -
அரிசி மற்றும் பருப்பை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்துஎண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .இதில் பூண்டை தட்டி சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும்.
இதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து ,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில்ஊற வைத்துள்ள அரிசி ,பருப்பை ,தண்ணீர் வடித்து சேர்த்து வதக்கி, கஞ்சிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து ,குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 15 நிமிடம் சிறு தீயில் வேக வைத்து எடுக்கவும். குதிரைவாலி அரிசி கஞ்சி ரெடி.
0
Leave a Reply