சூரிய ஒளியை பார்த்தால் கண் கூசுவது ஏன்?
நீங்கள் சூரிய ஒளியைப் பார்த்தால் மட்டுமல்ல, பிரகாசமான எந்த ஒளியைப் பார்த்தாலும் கண் கூசும். இது ஒரு வகையான பார்வைப் புலனுக்கான தகவமைப்பே ஆகும்.
இந்த பிரகாசமான ஒளியைப் பார்க்கும் போது, கண்ணில் உள்ள ரெடப்சின் நிறமி செயலிழக்கப்படுகிறது. இதனால் ஒளி-வேதியியல் வினை மட்டுப்படுகிறது. அப்போது நமக்கு சில வினாடிகளுக்கு பார்வையே தெரியாது. உதாரணமாக வெளியே, வெளிச்சமான பகுதியில் இருந்து இருண்ட திரையரங்கிற்குள் நுழையும்போது இந்நிலை ஏற்படுவதை நீங்கள் காணலாம். மேலும், ஒளிச் செறி விற்கேற்ப கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்த கண் பார்வையின் விட்டத்தின் அளவு விழித் திரை தசைகளால் தானியங்கு நரம்பு களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தப் பாதுகாப்பு கூறுகள் அனைத்தும் கண்களைக் காப்பதற்கே தகவமைப்பாக அமைந்துள்ளன.
0
Leave a Reply