25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ்.

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. 

மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டம் ரயில்வே பணிகள் தவிர மீதம் முடிவடையும் நிலையை எட்டி உள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. அவ்வழியே வரும் வாகனங்கள் ஊருக்குள் நுழைய இந்த ரோட்டையே பயன் படுத்த வேண்டும். 

இதை  கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கிலோ மீட்டர் துார ரோட்டை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராகவிரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஓடை மீது அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள பாலங்களை அகற்ற வருவாய் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப் பட்டது.

இந் நிலையில் சங்கரன் கோவில் ரோட்டில் நீர்வழி ஓடையில் உள்ள பொதுத்துறை வங்கி, திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட 45 அனுமதியற்ற பாலங்களை 15 நாட்களுக்குள் அகற்ற ,தவறும்பட்சத்தில் அரசு சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குரிய தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம், வசூல் செய்யப்படும் எனநெடுஞ்சாலைதுறைசார்பில் நோட்டீஸ்வழங்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News