ஒரே காலாண்டில் ரூ. 644 கோடி நிகர லாபம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்.
மின்சார விநியோகத்தின் மூலம் கிடைத்த வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது. அக்டோபர்30,2025 அன்று வெளியான தகவலின்படி, பங்குச் சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி(AGEL) பங்குகள்10.80% உயர்ந்து ஒரு பங்கு ரூ.1,113.05 ஆக வர்த்தகமானது.அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் ரூ.644 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 28% அதிகமாகும். இந்தச் சாதனை, நிறுவனத்தின் பங்குகளை கிட்டத்தட்ட 11% உயரச் செய்துள்ளது.
நாள் முழுவதும், இந்த பங்குகள் அதிகபட்சமாக 13.98% உயர்ந்து ரூ. 1,145-ஐ தொட்டன. தேசிய பங்குச் சந்தையில் (NSE) ஒரு பங்கு ரூ. 1,112.60 ஆக உயர்ந்து,10.79% வளர்ச்சி கண்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்தின் வளர்ச்சி இந்த லாப உயர்விற்கு முக்கிய காரணமாகும்.கடந்த2024-25 நிதியாண்டின் ஜூலை,செப்டம்பர் காலகட்டத்தில்நிறுவனம் ரூ.515 கோடி நிகரலாபம் ஈட்டியிருந்ததுகுறிப்பிடத்தக்கது. மின்சாரவிநியோக வருவாய்கடந்த ஆண்டின்இரண்டாம் காலாண்டில்ரூ.2,308 கோடியாகஇருந்த நிலையில், நடப்பு காலாண்டில்ரூ. 2,776 கோடியாகஉயர்ந்துள்ளது.
மொத்த வருவாய்கடந்த ஆண்டின்ரூ. 3,396 கோடியிலிருந்துரூ. 3,249 கோடியாககுறைந்துள்ளது. மொத்தசெலவுகள் ரூ. 2,857 கோடியிலிருந்து ரூ.2,874 கோடியாக சற்றுஅதிகரித்துள்ளனஅதானி கிரீன்எனர்ஜியின் தலைமைச்செயல் அதிகாரிஆஷிஷ் கண்ணாஒரு அறிக்கையில்,"குஜராத்தில் காவ்டாவில்30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்கஎரிசக்தி உற்பத்திஆலையை அமைக்கும்பணி வேகமாகநடைபெற்று வருகிறது. செயல்பாட்டுத் திறன், திட்ட அமலாக்கம்மற்றும் பாதுகாப்பைமேம்படுத்த புதுமையானதொழில்நுட்பங்களை தொடர்ந்துபயன்படுத்தி வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அதானிகுழுமத்தின் பெரும்பாலானமற்ற நிறுவனப்பங்குகளும் உயர்வுடன்முடிவடைந்தன. அதானிஎனர்ஜி சொல்யூஷன்ஸ் 5.05%, என்டிடிவி 3.26%, அம்புஜா சிமெண்ட்ஸ் 2.95%, அதானி போர்ட்ஸ் 2.68% மற்றும் அதானிடோட்டல் கேஸ் 2.15% என குறிப்பிடத்தக்கவளர்ச்சியை பதிவுசெய்துள்ளன.
0
Leave a Reply