ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.
ரஜினியின் 170வது படமான இதை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் ஏற்கனவே மனசிலாயோ, ஹண்டர் வண்டார் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.
வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரின் மாஸ் மொமண்ட்ஸையும் கொண்டாடும்படி உள்ளது.. மொத்தத்தில் வேட்டையன் மாஸ் பிளஸ் கிளாஸ் நிறைந்த மெசேஜ் உள்ள படம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி Above average என பதிவிட்டு உள்ளார்.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவுக்கு தான் சொல்லி இருந்தாராம் இயக்குனர் ஞானவேல், ஆனால் இது ரஜினிகாந்துக்கு பொருத்தமாக இருக்கும் என சூர்யா சொன்னதை அடுத்து தான் சூப்பர்ஸ்டாரை வைத்து வேட்டையன் படத்தை எடுத்திருக்கிறார் ஞானவேல்.
வேட்டையனுக்கு பிளாக்பஸ்டர் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜெயிலர் பட சாதனையை முறியடிக்குமானு தெரியல, ஆனா அத விட ரொம்ப நல்ல படம். ஞானவேல் எங்க ஜெயிக்குறார்னா ரசிகர்களுக்கு மாஸ் மொமண்ட்ஸ படம் பூரா உறுத்தல் இல்லாம தெளிச்சு வெச்சுருக்காரு. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத படம்..
0
Leave a Reply