25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


அமிதாப்புடன் மீண்டும் பணி மகிழ்ச்சியில் - ரஜினிகாந்த்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமிதாப்புடன் மீண்டும் பணி மகிழ்ச்சியில் - ரஜினிகாந்த்...

...'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது170வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆரம்பமானது. பின் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புமும்பையில் நடந்து வருகிறது.அதில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த்தும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அமிதாப்புடன் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், “லைக்காவின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில், தலைவர்170 படத்தில்,33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி, அமிதாப்புடன் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது,” என அமிதாப்புடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்....ரஜினிகாந்த், அமிதாப் இருவரும் ஹிந்தியில் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இருவரும் இணைந்து கடைசியாக நடித்த ஹிந்திப் படம் 'ஹம்'. அப்படம் தான் தமிழில் 'பாட்ஷா'வாக ரீமேக் ஆனது.ரஜினியின்170வது படத்தில் அமிதாப் தவிர மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா...விஜயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News