அஜித்தின் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
தமிழில் அஜித், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அஜித்தின் மற்றொரு படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.. இந்த படத்தை பாலிவுட்டில் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார்.
இதில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். சமீபகாலமாக அங்கு ஷாருக்கானின் படங்கள் மட்டும் தான் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் இயக்குனர் கௌதம் மேனன் சல்மான் கான் வைத்து என்னை அறிந்தால் படத்தை ரீமேக் செய்ய உள்ளதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். மேலும் என்னை அறிந்தால் ரீமேக்கில் மற்ற பிரபலங்கள் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஹிந்தி மொழியில் வெளியான படங்கள் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் உருவாகும் பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.jith
0
Leave a Reply