25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


தனுஷ் நடித்திருக்கும் 47வது படம் கேப்டன் மில்லர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தனுஷ் நடித்திருக்கும் 47வது படம் கேப்டன் மில்லர்

தனுஷ் நடித்திருக்கும்47வது படம் கேப்டன் மில்லர் அவருடன் பிரியங்கா மோகன். சிவராஜ்குமார். சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படம் பிரியாடிக் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள கேப்டன் மில்லர் படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், இப்படம் திரைக்கு வருவதற்கு 38 நாட்கள் இருப்பதால் விரைவில் புரமோஷன் பணிகளை தொடங்கவிருக்கிறோம். சமீப காலமாக படங்களின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதனால் இப்படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதோடு இதுவரை தனுஷ் நடித்த படங்களில் இது ஒரு தனித்துவமான படமாக இருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகவும் இந்த படம் இருக்கும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் மீது படையெடுத்த அந்த அடிமைத்தனத்தை மட்டுமின்றி இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிமைத்தனம் ஆதிக்க வர்க்கத்தின் செயல்களையும் பேசக்கூடியதாக இந்த கேப்டன் மில்லர் படம் இருக்கும் என்கிறார் அருண் மாதேஸ்வரன்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News