தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 1476 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் கைப்பற்றிய சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ சுத்தின் மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் காதுன்யா (வட்டு எறிதல்) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இதில் அடங்குவார்கள்.நேற்று மாலை நடந்ததொடக்கவிழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்து ,வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுமேம்பாட்டுதுறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா, பொதுச் செயலாளர் சத்ய நாராயணா. முன்னாள் தலைவர் தீபா மாலிக், பாரா தடகள வீரர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் கிருபாகர ராஜா வரவேற்றார். முடிவில் சென்னை மாவட்ட பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் எம்.எஸ். நாகராஜ் நன்றி கூறினார். முன்னதாக நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.41 பிரிவு) அரியானா வீரா நவ்தீப் 39.93 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான குண்டு எறிதலில் (எப்.56 பிரிவு) அரியானா வீராங்கனை பூனம் ஷர்மா 6.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply