உத்தரகாண்ட் தேசிய விளையாட்டு போட்டிகள்
டேபிள் டென்னிஸ்
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகா மோதினர்.முதல் இரு செட்டை கைப்பற்றிய செலினா, அடுத்த மூன்று செட்டுகளை இழந்து, கடைசி இரு செட்டை வசப்படுத்தினார்.நீண்ட போராட்டத்தின் முடிவில், 4-3 செலினா (11-7, என்ற 11-2, 6-11, 7-11, 8-11, 11-7, 11-9) கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டி ராவின் ஜாஷ் மோடியை சந்தித்தார். சத்யன் 3-4 ) என்ற (7-11, 6-11, 11-7, 11-8, 14-12, 6-11, 11-6) கணக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜாஷ் மோடி தங்கம் வென்றார்.
கலப்பு இரட்டையர் பைனலில் மேற்கு வங்கத்தின் ஆயிஹா, அனிர் பன் ஜோடி 3-2 என தங்கப் பதக்கம் வென்றார்.
ஹாக்கி
பெண்களுக்கான ஹாக்கி பைனலில் ஹரியானா, மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 4,1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது.
மல்யுத்தம்
பெண்களுக்கான 'பிரீஸ் டைல்' மல்யுத்தத்தில் மகா ராஷ்டிராவின் சுவாதி(53 கிலோ), ஹரியானாவின் தப்ஸ்யா(57 கிலோ) தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய்தீப் (74 கிலோ), டில்லியின் முகுல் (86 கிலோ) தங்கம் வென்றனர்.
0
Leave a Reply