விளையாட்டு போட்டிகள் 17 th FEBRUARY
ஹாக்கி
சர்வதேசஹாக்கிகூட்டமைப்புசார்பில்பெண்களுக்கானபுரோலீக்6வதுசீசன்(2024,25)நடக்கிறது.மொத்தம்9 அணிகள்பங்கேற்கின்றன.ஒடிசாமாநிலம்புவனேஸ்வரில்நேற்று நடந்த லீக்போட்டியில்இந்தியா, இங்கிலாந்துஅணிகள்மோதின. இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது.
கால்பந்து
இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணிக்குகிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் வில்மர் ஜோர்டான்(19வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
டென்னிஸ்
புனேயில், மகாராஷ்டிரா ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவீடனின் எலியாஸ் மோதினர். ஒரு மணி நேரம்,52 நிமிடம் நீடித்த போட்டியில் ராம்குமார் 5-7, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்
தடகளம்
மாற்றுத் திறனாளிக்கான, தேசிய பாரா தடகளப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை துவங்குகிறது. பாரா தடகள வீரர், வீராங்கனைகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, இன்று காலை சென்னை வருகின்றனர். இதுவரை, 1,430க்கும் அதிகமான, வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 180க்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
0
Leave a Reply