25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டு 38வது சீசன் பதக்கபட்டியலில் தமிழகம் ஆறாவது இடம் பிடித்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டு 38வது சீசன் பதக்கபட்டியலில் தமிழகம் ஆறாவது இடம் பிடித்தது.

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டின் 38வது சீசன் ,18 நாள் நடந்த இதில், 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடந்தன.

தமிழகத்தின் ரோகித் தனுஷ் (நீச்சல்),நர்மதா (துப்பாக்கிசுடுதல்), ஆரோக்கியா அலிஷ், அஜித் நாராயணா (பளு துாக்குதல்), வேலவன் செந்தில் குமார் (ஸ்கு வாஷ்), சதிஷ் குமார் (பாட்மின்டன் ஒற்றையர், கலப்பு இரட்டையர்), அபினவ் சண்முகம், மணிஷ் சுரேஷ் குமார் ஜோடி (டென்னிஸ்), செலினா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் தங்கம் கைப்பற்றினர். 

ஸ்குவாஷ் (ஆண்கள் இரட்டையர்), கூடைப்பந்து, பீச் வாலி பாலில் தமிழகம் தங்கம் வசப்படுத்தியது. 

தடகளத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அசத்திய தமிழகத்தின் வித்யா (400 மீ., தடை ஓட்டம்) 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார். தவிர பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), பவித்ரா (போல் வால்ட்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல் ) அசத்தினர். 

தேசிய விளையாட்டில் தமிழகம் 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.முடிவில் தேசிய விளையாட்டு கொடி இறக்கப்பட்டது. 2027ல் தேசிய விளையாட்டு நடக்க உள்ள மேகாலயா முதல்வர் கான்ராடு சங்மாவிடம் கொடி வழங்கப்பட்டது.

" இந்திய விளையாட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த தயாராக உள்ளோம். அப்போது நமது நட்சத்திரங்கள் பதக்கங்கள் வென்று, இந்திய தேசியக் கொடியை உயரே பறக்கச் செய்வர்," என்று அமித் ஷா கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News