ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் வேலவன் செந்தில்குமார் வெற்றி .
அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் நகரில் ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கின்றது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அமெரிக்காவின் ஷாஜகான்கானை எதிர் கொண்டார். முதல் இரு செட்டை 11-7, 11-4 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 9–11 என நழுவ விட்டார். நான்காவது செட்டில் 11-7 என சிறப்பாக செயல்பட்ட இவர், முடிவில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply