ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் .
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு பெரிய பெரு மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டு புறப்பாடு நடந்தது. பல்லக்கில் எழுந்தருளிய பெரிய பெருமாளை பக்தர்கள் ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்து கோயில் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மும் முறை சுற்றி வந்து கோபால விலாசத்தில் எழுந்தருள செய்தனர். ஸ்ரீதேவி, பூமாதேவி தாயார்களும் பங்கேற்க, ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள்,ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0
Leave a Reply