திருக்கச்சி அல்லது காஞ்சி - வரதராஜ பெருமாள் கோயில்:
சிறப்பு வாய்ந்த அத்தி வரதர் உள்ள பெருமை பெற்ற திருத்தலம்.பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் இறைவனின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சோழர்களால்11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளஇந்தகோயில்சோழர்களால் இக்கோயிலில் பாஞ்ச ராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
அத்தி வரதர் எனப்படும்அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி சிறீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர்.அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல்24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்குப் பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.
0
Leave a Reply