25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ரோஜா செடி வளர்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோஜா செடி வளர்ப்பு.

ரோஜா செடியை கட்டிங்ஸில் இருந்து உருவாக்கலாம். நர்சரிக்கு சென்று நாட்டு ரோஜா செடியில் இருந்து ஒருகிளையை வெட்டி வாங்கவும்.

பென்சிலின் அடர்த்தியில் ரோஜா கட்டிங்ஸ் இருப்பது அவசியம்.

இந்த கட்டிங்ஸை வேர்கள் உற்பத்தி ஆனபிறகு செம்மண் கலவையில் சேர்த்து தொட்டியில் வளர்க்கலாம்.

15 செ.மீநீளம் அதாவது சின்ன ஸ்கேல் அளவில் கட்டிங்ஸ் எடுத்து அடிபாகத்தை 45-50 டிகிரி அளவில் கூர்மையாக வெட்டவும்.

இப்போது ஒருமூடி தேன் எடுத்துக் கொண்டு கூர்மைபடுத்திய ரோஜா கட்டிங்ஸை அதில் மூழ்கி எடுக்கவும்.

வேர்கள் நன்றாக வளரகற்றாழை ஜெல் அல்லது தேன் பயன்படுத்தலாம். இதே போல 4-5 கட்டிங்ஸ் தயாரிக்கவும்.

இதைமண் புழு உரத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்து காற்று புகாதவாறு பிளாஸ்டிக் போட்டு மூடி உரத்திற்கும் பிளாஸ்டிக்கிற்கும் உள்ள இடைவெளியில் தண்ணீர் ஊற்றவும்.

நிழலான இடத்தில் வளர்த்தால்20 நாட்களில் வேர் பிடித்துவிடும். ஐந்து கட்டிங்ஸில் மூன்றாவது நன்கு வேர்கள் பிடித்து தயாராகிவிடும்.

ரோஜா செடிக்கு மண் கலவை.

பத்து அங்குல மண்தொட்டியில் உதிரியான செம்மண் 50 விழுக்காடு, கோகோபீட் 25 விழுக்காடு, இயற்கை உரம் 25 விழுக்காடு நிரப்பி வேர் பிடித்த கட்டிங்ஸ் வைக்கவும்.

கோகோபீட் என்பது தென்னைநார் கழிவு ஆகும்.

தொட்டியில் நான்கு - ஐந்து ஓடைகள் இருந்தால் தண்ணீர் சரியாக வெளியேற்றப்பட்டு வேர் அழுகல் நோய் தவிர்க்கப்படும்.

இயற்கை உரம் என்பது மாட்டு சாணம் உரம் அல்லது மண்புழு உரம் பயன்படுத்தலாம்.

15-20 நாட்களுக்கு ஒருமுறை டிஏபி உரம் பயன்படுத்தலாம். இதை செடியில் நேரடியாக பயன்படுத்தாமல் வேர் பகுதியை சுற்றி கொஞ்சம் மண் தோண்டி அதில் போடவும்.

செடிக்கு தண்ணீர் ஊற்ற அரிசி கழுவும் தண்ணீர் பயன்படுத்தலாம்

இலைகள் வளர ஆரம்பித்த சில நாட்களில் அதன் நுனிகள் காய்ந்து நிறம் மாறி கருப்பாக மாறும். அப்போது இலைகளை வெட்டி விடவும். புதிய இலைகளையும் வெட்டி விடுங்கள்.

இதற்கு அரைஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் சின்ன ஷாம்பு பாக்கெட்டுடன் கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றி வாரத்திற்கு ஒரு முறை தெளித்து வாருங்கள்.

தினமும் 6 மணிநேரம் மாடியில் ரோஜா செடி மீது வெயில் படும் படி வளர்க்கவும்.

மொட்டுக்கள் வைத்த பிறகு அதில் கருப்பு நிறத்தில் பூச்சிகள் வளரும் முட்டையிடும்.

இதைதடுத்திட வேப்ப எண்ணெய்யை கொஞ்சம் ஷாம்புவுடன் கலந்து ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றி செடி மீது அடிக்கவும்.

2-3 நாட்களில் பூச்சிகள் ஓடிவிடும். நன்கு கவனிப்புடன் ரோஜா செடி வளர்த்து வந்தால் தோட்டம் போல பூத்து குலுங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News