மழையை அறிவிக்கும் புன்னை மரம்
மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மைகள் செய்ய இயற்கை மரங்கள்.இன்றைக்கு, நகர விரிவாக்கம் சாலை உருவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வீழ்த்தப்படுகின்றன. இதனால், பல வகை மரங்கள் அழியும் நிலையில் உள்ளன.கடலோர பகுதிகளில் எங்கும் காணப்படும் புன்னை மரம் பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரும். கடும் கோடையிலும் இதன் இலைகள் பசுமையாக கண்களுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் புன்னை மர நிழலில் அம ரும்போது புன்னை மரக் காற்றில் கலந்துள்ள அதிக அளவிலான பிராணவாயு சுவாசத்தை சீராக்கி மன அழுத்தத்தை போக்கி புத்துணர்வு பெற வைக்கும் என்கிறார்கள்
தாவரவியலாளர்கள். புன்னை இலைகள் சளி, தலைவலி, கண் சூடு, வயிற்று வலி மற்றும் தோல் வியாதிகளை போக்கும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. புன்னை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புங்க எண்ணெய் முற்காலத்தில் மக்கள் விளக்கு எரிக்க பயன்படுத்தினர். புன்னை மரத்தில் மலர்கள், அதிக அளவில் பூத்துக்குலுங்கினால் அந்தப் பகுதியில் நிச்சயம் மழைப்பொழிவு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறி யுள்ளனர்.
புயலுக்கு சாயாத, பூச்சி அரிக்காத உறுதி தன்மை புன்னை மரங்களுக்கு உண்டு என்பதால் கப்பல் கட்டவும் புன்னை மரங்கள் பயன்பட்டன. பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதி, புன்னை மரங்களின் வனமாக இருந்ததால், அந்த ஊர் புன்னைநல்லூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
0
Leave a Reply