25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வீட்டுத்தோட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வீட்டுத்தோட்டம்

வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறி செடிகள். பூச்செடிகள் வளர்ப்பதற்குஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு மன நலனை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் தோட்டம் வளர்ப்பது மன மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.'

செடிகளை பராமரிப்பது. அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும். செடிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிப்பது, சிந்திப்பது படைப்பாற்றல் திறனை 45 சதவீதம் அதிகரிக்க செய்யும் என்பது இங்கி லாந்தை சேர்ந்த எக்ஸிடெர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந் துள்ளது.

தனிமை சூழலில் வசிப்பவர்கள் செடிகளை வளர்த்து பராமரிப்பது தனிமை உணர்வை போக்கும். மனச்சோர்வை விரட்டும். மன மகிழ்ச்சியையும் அதிகரிக்க வழிவகுக்கும். பசுமை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பது மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி மன நிம்மதியாக உணர வைக்கும். மகிழ்ச்சியான மன நிலையை யும் உண்டாக்கும். ஈரப்பதமுள்ள மண்ணில் கைகளை புதைத்து தோட்ட வேலை செய்யும் போது நரம்பு மண்டலத்திலும் அமைதியான உணர்வை ஏற்படுத்தும். மன நலனில் மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியான சூழலையும் உணர வைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News