வாழைத்தண்டு வடை.
தேவையான பொருட்கள்:
1/4கிலோ வடைப் பருப்பு,
1வாழைத்தண்டு,
2பெரிய வெங்காயம்,
2 துண்டு இஞ்சி,
6 வரமிளகாய்,
1துண்டு பட்டை,
2டீஸ்பூன் சோம்பு,
கறிவேப்பிலை மல்லித்தழை,
தேவையான அளவு உப்பு எண்ணெய்,
செய்முறை:
வடை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துவடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஊறிய வடை பருப்பு மிளகாய் சோம்பு பட்டை இஞ்சி கொஞ்சம் கருவேப்பிலைஉப்பு இதை அனைத்தையும் அரைத்து வைத்துக்கொள்ளவும்
.கொஞ்சம்கொரகொரப்பாக. தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
வாழைத்தண்டை பொடிப் பொடியாக நறுக்கி எண்ணெய் இல்லாமல்வாணலியில் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்த கலவையில் மல்லித்தழை வெங்காயம் கறிவேப்பிலைவாழைத்தண்டு இதை அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கி எண்ணெயில்வடை போல் தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.
வாழைத்தண்டு வடை சத்தானது ,சுலபமானது.
0
Leave a Reply