வாழைத்தண்டு சிப்ஸ்
தேவையான பொருட்கள்:
2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்,
1டேபிள்ஸ்பூன் மைதா,
1கப் வாழைத்தண்டு,
1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
தேவையான அளவு உப்பு,
1 கொத்து கறிவேப்பிலை,
தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார், ஒரு டேபிள்ஸ்பூன் மைதா,ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ,சேர்த்து பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான உப்பு, சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
பிறகு நீள நீளமாக நறுக்கி வைத்த வாழைத்தண்டை, தண்ணீர் இல்லாமல்பிழிந்து கலந்த மாவில் சேர்த்து பிசறி வைக்கவும்.
கலந்து வைத்த வாழைத்தண்டு மசாலாவை பத்து நிமிடங்கள் ஊற வைத்துபின்பு, ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து,எண்ணெய் சூடானதும் ஊற வைத்த வாழைத்தண்டு சேர்த்து பொரிக்கவும்.
நன்றாக பொன்னிறமாக வரும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும் .அதேஎண்ணெயில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
இரண்டையும் கலந்து பரிமாறவும்.சுவையான வாழைத்தண்டு சிப்ஸ் தயார்.
வாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால்,குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
0
Leave a Reply