வாழைத்தண்டு பொரியல்
தேவையான பொருட்கள்:
1 வாழைத் தண்டு,
11/2 டம்ளர் மோர்,
1 வெங்காயம்,
2 காய்ந்த மிளகாய்,
ஒரு கொத்து கறிவேப்பிலை,
1/2கப் தேங்காய் துருவல்,
1ஸ்பூன் கடுகு,
1/2ஸ்பூன் சீரகம்,
1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு,
தேவையான அளவு உப்பு.
செய்முறை :
வாழைத் தண்டை சிறிதாக நறுக்கி எடுத்து மோரில் போட்டு நன்றாக கழுவிஎடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியில் ,வாழைத்தண்டை சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர்ஊற்றி உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துவெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் வாழைத்தண்டை சேர்த்து கலந்துவிட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவி எடுத்து வைத்துகொள்ளவும்.
வாழைத்தண்டு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
வாழைத்தண்டு பொரியல் ரெடி.
0
Leave a Reply