25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


பூச்சிகளை கட்டுப்படுத்தும் மஞ்சள், நீலநிறங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூச்சிகளை கட்டுப்படுத்தும் மஞ்சள், நீலநிறங்கள்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இலை பேன்களை கண்காணிக்க ஏக்கருக்கு12 முதல்15 எண்ணிக்கையில் மஞ்சள் ஒட்டு பொறி பயன்படுத்தலாம். பசுமை குடில், நிழல் வலை கூடார பயிர்களுக்கு ஐந்து மீட்டருக்கு ஒரு மஞ்சள் ஒட்டு பொறியை செடி களின் கிடைமட்ட அள வில் காற்று வீசும் திசைக்கு எதிராக கட்ட வேண்டும். இதை வீட்டிலேயேஎளிமையாக தயாரிக்கலாம். சிறிய செவ்வக வடிவ அட்டை, பிளாஸ்டிக் அல்லது இரும்பு பெட்டி போன்றவற்றில் மஞ்சள் நிற பெயின்ட் பூச வேண்டும். அதன் மேல் கிரீஸ் அல்லது ஆமணக்கு எண் ணெய்யுடன் ஏதேனும் மருந்து கலந்து வயலில் வைத்தால் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கும். நீலநிற ஒட்டு பொறி கள் 'ட்ரிப்ஸ்' எனப்படும், இலை பேன்களை கவர்ந்து அழிக்கும்.

 ஒட்டுப்பொறி களை நிலத்தில் நிறுவியபின் ஸ்பிரேயர் மூலம் தண் ணீரை தெளித்தால் இலை பேன் இடம் மாறி தாவும் போது ஒட்டுப்பொறியில் சிக்கி இறந்து விடும்.பூண்டு அல்லது சின்ன வெங்காய சாற்றின் மூலம் அனைத்து விதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், பட்டாம்பூச்சி வகை பூச்சி களையும் கட்டுப்படுத் தலாம். இதில் இருந்து வரும் வாசம் பூச்சிகளால் தாங்கமுடியாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News