போட்டியில் இந்திய அணி,இன்று மதுரையில் நடக்கும், தனது கடைசி லீக் போட்டியில், சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில் காலிறுதிக்கு முன்னேறலாம்.
'நம்பர்-2' ஆக உள்ள இந்திய அணி ,உலகத் தரவரிசையில் 'பி' பிரிவில் சிலி, ஓமன், சுவிட் சர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் சிலி (7-0), ஓமனை (17-0) வீழ்த்திய இந்திய அணி, 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி, 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும்.
0
Leave a Reply