பனிக்காலத்தில் முகம் கழுவ, 'மாய்சுரைஸர் பேஸ்வாஷ்' தான் சிறந்தது
ஒரு நாளைக்கு. இரண்டு அல்லது மூன்று முறையாவது, முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். இப்படி சுத்தம் செய்யும் போது, சோப்பையோ, பேஸ் வாஷை யோ பயன்படுத்தினால், முகத்திலுள்ள இயற்கையான எண்ணெய் பசை குறைந்து விடக் கூடும். அதனால், பனிக்காலத்தில் முகம் கழுவ, 'மாய்சுரைஸர் பேஸ்வாஷ்' தான் சிறந்தது
குளிர் காலத்தில், தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்வது. சருமத்திற்கு மிக நல்லது. மிதமான சூடுள்ள எண்ணெயில், குளிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன், மசாஜ் செய்து குளியுங்கள். இதனால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்பெண்ணெய் மற்றும் அவகோடோ எண்ணெய் போன்றவை, 'மசாஜ்' செய்வதற்கு ஏற்றவை
குளிர் காலத்திற்கேற்ப 'ஆயில் மிக்ஸ்டு மாய்சுரைஸரை' உபயோகிக்கலாம். இது, உங்கள் சரும வறட்சியை தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.
கோடை காலத்தில் தான், 'சன் ஸ்கிரீன் லோஷன்' பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர், பலர். பனிக் காலத்திலும் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன், 'சன் ஸ்கிரீன் லோஷனை' பூசிக் கொள்ளலாம்
உடலில் மற்ற பகுதிகளை விட, கைகள் மிகவும் மிருதுவானது. எனவே, 'மாய்சுரைஸர் லோஷனை' உங்கள் கைகளிலும், கால் பாதங்களிலும் மறக்காமல் பூசிக் கொள்ளுங்கள். இது, அப்பகுதியில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
0
Leave a Reply